Dear Brother! Though I may be dead, at least you should live! Even if I am murdered or slaughtered in the cause of ISLAM your services to our community must continue. Although I am not with you, ALLah, the All - mighty, is ever present with us! Saheed Alhaj Palani baba

Thursday, October 22, 2009

வளர்ந்து வரும் இஸ்ரேலிய-ஹிந்துத்துவ பயங்கரவாதம்!


சென்ற 17.10.09 ஆம் தேதி தீபாவளிக்கு முந்தைய நாள் ஒரே பரபரப்பு!

என்னவென்று நினைக்கிறீர்கள்?

"தீபாவளி கொண்டாட்டத்தினைச் சீர் குலைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் முயற்சி" என்று பத்திரிக்கைகளிலும்-மின் ஊடகங்களிலும் வெளியான செய்தியைத் தொடர்ந்து எழுந்த பரபரப்புதான் அது.

அத்தோடு அமெரிக்க உளவு நிறுவனமும் தன் பங்கிற்கு வழக்கம் போல் எச்சரிக்கை செய்தது. ஆனால் நடந்தது என்ன?


கோவா மாநிலம் பண்டா நகரில் தீபாவளி இரவு அன்று ஸ்கூட்டரில் சென்ற இருவர், அவர்களின் வண்டியில் வைத்திருந்த குண்டு வெடித்து மரணம் அடைந்தனர். கோவா மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து இறந்தவர்கள் இந்துக்களான பட்டேல் மற்றும் நாயக் என்று அடையாளம் கண்டனர். விஷயம் அத்தோடு முற்றுப் பெறவில்லை. வழக்கத்திற்கு மாறாக இம்முறை அந்தக் குண்டுவெடிப்பைக் குறித்து நமது நடுவு(!)நிலை ஊடகங்களின், "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்ற கூக்குரல் வெளிவரும் முன்னரே, வேகமாகச் செயல்பட்ட காவல்துறையினர், ஸ்கூட்டரில் இறந்த இருவரும் எடுத்துச் சென்ற குண்டு, எதிர்பாராத விதமாக முன்னரே வெடித்துச் சிதறியதையும் குண்டு கொண்டு சென்றவர்கள் யாவர்? என்ற விசாரணையில், அவர்கள் இந்துத் தீவிரவாத அமைப்பான சனாதன் சான்ஸ்தாவினைச் சார்ந்தவர்கள் என்பதையும் கோவா காவல்துறையினர் கண்டு பிடித்து விட்டனர்.

இந்த சனாதன் சான்ஸ்தா அமைப்பு எது? என்பது வாசகர்களுக்கு மறந்திருக்காது!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு மாலேகான் நகரில் பைக் குண்டு வெடித்து பலர் மாண்ட சம்பவத்தில் கைது செய்யப் பட்ட பெண் சாமியார் பிரக்யா சிங் மற்றும் அந்தக் குண்டு வெடிப்பின் மாஸ்டர் மைண்ட் ஆகச் செயல்பட்ட இராணுவ அதிகாரி கர்னல் புரோகித் ஆகியோர் கைது செய்யப் பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அவ்விருவரும் தீவிரமாகச் செயல்பட்ட "அபினவ் பாரத்" இயக்கத்துடன் தொடர்புடைய இயக்கம்தான் சனாதன் சான்ஸ்தா என்ற தீவிரவாத அமைப்பு. அபினவ் பாரதின் முக்கிய பணி, ஆங்காங்கே நாச வேலைகளைச் செய்து விட்டு, அதனை முஸ்லிம்கள் செய்ததாகத் திசை திருப்பி விடுவதாகும் அந்த இயக்கதோடு தொடர்புடைய மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இயக்கத்தின் தொண்டர்கள் இருவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்ததிலிருந்து, இவர்களே பயங்கர வாத-நாசவேலைகளைச் செய்து விட்டு காவல் துறையினரை ஏவி, முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து கைது செய்யத் தூண்டும் நடவடிக்கையாகவும் அதன் மூலம் இரு சமூகத்தினரிடையே கலவரம் ஏற்பட வழிவகை செய்யும் அடித்தள முயற்சியாகவும் இது இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

இதே நாளில் மற்றொரு சம்பவமும் நடந்ததை இவ்விடத்தில் ஒப்பு நோக்குவது பொருத்தமாக இருக்கும். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தேசிய மட்டைப் பந்துப் போட்டி ஒன்று 17.10.09ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் கலந்து கொள்ள காஷ்மீர் மாநில கிரிக்கெட் குழுவினர் வருகை தந்தனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் கர்நாடக காவல் துறையினர் எவ்விதக் காரணமும் இன்றி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் விளையாட்டு வீரர் ரசூல் என்பவருடைய பையில் சோதனையிட்டபோது, காவலரின் கையிலிருந்த கருவியிலிருந்து ஒலி எழுந்துள்ளது. ரசூலின் பையைத் துருவி-துருவிச் சோதனையிட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை. இருந்த போதும் ரசூலையும் அவருடன் தங்கியிருந்த மற்றொரு வீரரையும் கர்நாடக காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

கர்நாடகக் காவல்துறையின் இத்தகைய செயலுக்குக் காஷ்மீர் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஃபாரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்ததுடன் போட்டியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மேலும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த பின்பு பெங்களூரு போலிஸ் கமிஷனர் சங்கர் பிடாரி, "சில தரப்பினரிடம் வந்த தகவலினை வைத்துத் தவறாக நடவடிக்கை எடுத்து விட்டதாக" அறிவிக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு வரும் வரை, "காஷ்மீரிலிருந்து வந்த முஸ்லிம் விளையாட்டு வீரர் கைது, தீவிரவாதியா? வெடிகுண்டா?" என்பது போன்றெல்லாம் பக்கங்களை நிறைத்த சில பத்திரிகைகள், "அந்த விளையாட்டு வீரர் அப்பாவி, தவறு நடந்து விட்டது" எனக் காவல்துறை கமிஷனர் அறிவித்த செய்தியினைக் கண்டு கொள்ளவே இல்லை. இவ்விடத்தில், கர்நாடக மாநிலத்தில் பெண் தீவிரவாதி பிரக்யாசிங்கிற்காகக் குரல் கொடுத்த பாஜக ஆட்சி செய்கின்றது என்பதையும் இதே மாநிலத்தில் தான் ராம் சேனா என்ற தீவிர இந்துக்கள் அமைப்பும் மிகச் சுதந்திரமாக செயல்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அநியாயப் பழி சுமத்தி ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட டாக்டர் ஹனீஃபிடம், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டதோடு மட்டுமல்லாது அவருக்கு உண்டான நஷ்டஈட்டுடன் அவர் திரும்பி ஆஸ்திரேலியா வந்து தொழில் செய்யலாம் என்றும் ஆஸ்திரேலியா அரசு அறிவித்தது. ஆனால் கர்நாடகக் காவல் துறையோ காஷ்மீர் வீரர் ரசூலின் பைச் சோதனையில் ஒன்றுமில்லை என்று அறிவித்து விட்டு, "அந்த வீரர் ரசாயன பரிசோதனை முடியும் வரையில் அறையை விட்டு வெளியேறக் கூடாது" என்றும் அறிவித்துள்ளது.

இந்துத்துவாவிலே பி.எப்.ஜி என்ற குழு இருப்பதாகவும் அது பெரும்பாலும் இளைஞர்களையும் மாணவர்களையும் கொண்ட அமைப்பாகவும் அவர்கள் வேலையே பெண்களைக் கவரக்கூடிய செல்போன் தொடர்பினை முஸ்லிம் பெண்களிடம் ஏற்படுத்தி அவர்களின் கற்பிற்குக் களங்கத்தினை ஏற்படுத்தி விட்டுத் தப்பித்துக் கொள்வதாகவும் சொல்லப் படுகிறது. இது தொடர்பான சில ஆர்.எஸ்.எஸ்ஸின் உள் சுற்றறிக்கைகளைச் சில முஸ்லிம் அமைப்புகள் கைப்பற்றி வெளியாக்கியுள்ளன.

***

"ஃபாலஸ்தீனின் காஸா பகுதியில் பெண்கள்-குழந்தைகள் எனப் பாராது கிட்டத்தட்ட 1300 முஸ்லிம்களைக் கொன்று இனப் படுகொலையில் இஸ்ரேல் அரசு ஈடுபட்டது" என ஐ.நாவிற்கான கமிட்டி குற்றம் சாட்டியதோடு சரி. ஆனால் நடவடிக்கை எடுக்க முடியுமா? முடியாது! ஏனென்றால் அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன் படுத்தி அதனைத் தடுத்து விடும். அப்படிப் பட்ட இஸ்ரேலின் ஏஜண்டுகள் இந்தியாவில் பல துறைகளிலும் தங்கள் ஆதிக்கத்தினை பதித்துள்ளார்கள் என்றால் மிகையாகாது. உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்:

சமீபத்தில் சென்னையில் நடந்த சட்டத்திற்கான கருத்தரங்கு ஒன்றில் இஸ்ரேல் நாட்டு பேராசிரியர் ஒருவர், "இந்தியாவிற்கு சிவில் சட்டம் அவசியம்" என்று பேசியிருக்கிறார். மத்திய அரசோ சிவில் சட்டம் கொண்டு வருவதா? வேண்டாமா? என்ற விஷயம் விவாதத்திற்குட்டது என்று சொல்லும் போது, அந்நிய நாட்டைச் சேர்ந்த இவர் பி.ஜே.பியின் ஊது குழலாக மாறி, பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு வேண்டும் என்கிறார். அது மட்டுமா? புஷ் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தபோது முக்கிய விண்வெளி ஆராய்ச்சி நிபுணராக இருந்த ஸ்டுவார்ட் என்பவர் இஸ்ரேல் உளவாளியாக இருந்திருக்கிறார். அவர் இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிற்கு 2008ஆம் ஆண்டு இரண்டு தடவை வந்து சென்றுள்ளார். அவர் முக்கியமான சிலத் தகவல்களை, சில டாலர்களுக்காகப் பரிமாற்றம் செய்யும் போது, அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐயிடம் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி கையும் களவுமாக மாட்டியுள்ளார்.

நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வரும் ஹிந்துத்துவாவும் உலகிற்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வரும் இஸ்ரேலிய சியோனிஸமும் உள்கட்டமைப்பில் ஒரே அடிப்படைகளைக் கொண்டுள்ளதும் அவை உள்ளுக்குள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதும் அவ்வபோது வெளியாகும் தகவல்கள் மூலம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளன. "மாலேகோன் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட கர்னல் புரோஹித், இஸ்ரேலைத் தலைமையாகக் கொண்டு ஒரு ஹிந்துத்துவ அரசை ஏற்படுத்துவது என்றும் அது இஸ்ரேலிலிருந்து இந்தியாவைக் கட்டுப்படுத்தும் வகையில் காய்களை நகர்த்தியதாகவும் அதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன என்றும் விரைவிலேயே அந்த ஆவணங்களுடன் மாலேகோன் குண்டு வெடிப்பு குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாகவும்" மகாராஷ்டிரத் தீவிரவாதத் தடுப்புப்படை அதிகாரி ஹேமந்த் கார்கரே சுட்டுக்கொல்லப்படுவதற்கு முந்தைய தினம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் மிக மிக அதிர்ச்சியளிக்கும் வகையில் அதற்கு அடுத்த நாள் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் மூலம் அவர் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். கார்கரே விசாரித்து வந்த மாலேகோன் குண்டுவெடிப்புத் தாக்குதலை விசாரிக்க, கார்கரேயால் விசாரணை செய்யப் பட்டவரும் மாலேகோன் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான கர்னல் புரோஹித்தின் நெருங்கிய நண்பருமான ஹிந்துத்துவவாதி என வெளிப்படையாகவே அறியப்படும் ரகுவன்ஷி மீண்டும் நியமிக்கப்பட்டார்.

ரகுவன்ஷி தலைமையேற்றவுடன், அதற்குச் சில தினங்களுக்கு முன்னர் கார்கரே கூறிய "ஹிந்துத்துவ-இஸ்ரேல் கூட்டணியை" நிராகரித்து விட்டு, "கர்னல் புரோஹித் அவ்வாறான திட்டம் போட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அந்தக் குண்டுவெடிப்புக்குச் சர்வதேச பின்னணி ஏதும் இல்லை" எனவும் அறிவித்தார். அடுத்தச் சில தினங்களில் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் முன்னர் கார்கரே கூறிய இஸ்ரேல் தொடர்பு குற்றச்சாட்டுகள் அடையாளமின்றி அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. நீதிமன்றமும் அந்தக் குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் நல்லப்பிள்ளையாக, அதுவரை "தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த மாலேகோன் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அனைவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விடுவித்ததோடு, சாதாரண வழக்குகளுக்கான நீதிமன்றத்திற்கு அவர்களின் வழக்கையும் 'மாற்றி' உத்தரவிட்டது.

மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலந்து சிந்திக்கும் எவருக்கும் இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை எவ்வாறு அபாய நிலையில் உள்ளது என்பதும் நாட்டில் இந்துத்துவா-இஸ்ரேல் கூட்டணி தீவிரவாதம் மறைமுகமாகக் கட்டமைக்கப்பட்டு மிக நேர்த்தியாக வளர்ந்து வருவதையும் அறிந்துக் கொள்ள இயலும்.

இந்நிலையில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்கள் எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் யாவை? தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்?

உடனடியாக மிகத் தீவிரத்துடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய விஷயமாகும் இது. இப்பொறுப்பைச் சமுதாய அமைப்புகளிடமும் ஜமாஅத்துகளிடமும் தற்போதைக்கு விட்டு விட்டு, மிக அடிப்படையாக முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்களை இங்குப் பட்டியலிடுவோம்:

ஜூம்மா தொழும் போது மக்காவிலுள்ள கஅபாவில் பாதுகாப்புக்காகக் காவலர்கள் இருப்பது போல இங்கும் இளைஞர்களைப் பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும்.

பெரிய தப்லீக் ஜமாத்துக்கள் நடக்கும் போது டோர் பிரேம் - ஹேண்ட் மேட் மெட்டல் டிடக்ட்டர்கள் பயன்படுத்தி, சோதனைக்குப் பின் அனுமதிக்க வேண்டும்.

பள்ளிவாசல்களில் இரவில் அடையாளம் தெரியாதவர்களைத் தங்க அனுமதிக்கக் கூடாது.

திருமணம் போன்ற மக்கள் கூடும் சமூதாய நிகழ்ச்சிகளில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பெரிய தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கைப்பேசி, இணையம் பயன்படுத்தும் முஸ்லிம் பெண்களை அவர்களின் பெற்றோர்/பாதுகாவலர் கவனமாகக் கண்காணிப்பதோடு, அப்பெண்களுக்கும் அநாமதேய அழைப்புகள் வரின் அதனை முறையாகப் பெற்றோர்/பாதுகாவலரிடம் தெரியப்படுத்த பயிற்றுவிக்க வேண்டும்.

பி.ஜே.பி ஆட்சி செய்யும் மாநிலங்களில் பயணம் செல்லும் போது அந்நியரின் சதிக்கு ஆளாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். குஜராத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இஸ்ரத், சொராபுதீன் போன்றவர்களைத் தீவிரவாதிகள் என்று போலி முத்திரைக் குத்தி அநியாயமாகப் படுகொலை செய்த பாஜக பயங்கரவாத நிகழ்வுகள் நடக்க வழிவகுக்கக்கூடாது.

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் எங்காவது நடந்தால் முஸ்லிம் பெண்கள், வியாபாரத் தலங்கள், மதரஸாக்கள், பள்ளிவாசல்கள் ஆகியவைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலைபார்க்கும் ஊர்களிலும் முஸ்லிம்கள் குறைந்த எண்ணிக்கையில் வாழும் ஊர்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய ஜமாஅத்துகள், அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும்.

முஸ்லிம்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்.

அரசு இயந்திரங்களின் முழு ஒத்துழைப்புடன் நாட்டில் ஆக்டோபஸ் போன்று பரவி வரும் ஹிந்துத்துவ-இஸ்ரேலிய பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்புப் பெற இத்தகைய நடவடிக்கைகள் மிகப் பெரிய பலனை ஏற்படுத்தி விடாது என்பது தெரிந்ததே. இருப்பினும் ஆரம்ப நடவடிக்கைகளாக இவற்றை உடனடியாக கவனிப்பதோடு, முஸ்லிம் சமுதாயம் ஒன்றிணைந்து நாட்டில் வளர்ந்து வரும் ஹிந்துத்துவ-இஸ்ரேலிய கூட்டு பயங்கரவாதத்தை வேரடி மண்ணோடு சாய்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

இதுவே இப்போதைய உடனடித் தேவையாகும்.

- முஹம்மது அலி. ஐ.பி.எஸ்

-நன்றி சத்தியமார்க்கம்.காம்

Tuesday, October 20, 2009

தமிழகத்தை கலவரக் காடாக்கத் துடிக்கும் குமுதம் ரிப்போர்ட்டர்


ருவனுக்கு சொல் புத்தி இருக்க வேண்டும். அல்லது சுயபுத்தி இருக்க வேண்டும். இரண்டும் இல்லாதவன் அறிவிலும், ஆற்றலிலும் நியாயத்தை எடைபோடும் விஷயத்திலும் இரண்டும் கெட்டானாகவேகருதப்படுவான். அதற்கு உடனடி உதாரணம் குமுதம் ரிப்போர்ட்டரில் 'செல்வா' என்பவரின் பெயரில் எழுதப்பட்டிருக்கும் இளம் பெண்களைக் குறிவைக்கும் 'லவ் ஜிகாத்' மிரண்டு கிடக்கும் பெற்றோர் என்ற தலைப்பில் வெளியான செய்தியைக் கூறலாம்.

வடமாநிலங்களிலும், கர்நாடகாவிலும் பரப்பிய மதவெறித் தீயைப் போல கேரள மாநிலத்தில் வழிபாட்டுத்தலம் தொடர்பான சர்ச்சைகளை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதை சங்பரிவார் அனுபவப்பூர்வமாக உணர்ந்து பலமுறை படுதோல்விகளை பரிசாகப் பெற்றதால் கச்சிதமாக திட்டமிட்டு கேரள மாநிலத்தில் கரையேறலாம் என்பதற்காக சங்பரிவார் நச்சு சிந்தனைகளின் தலைமைப்பீடம் கண்டுபிடித்த 'அவதூறு கற்பிதம்'தான் லவ் ஜிஹாத் என்ற திரிபுவாதமாகும்.

இந்த விவகாரத்தின் வீரியம் அறியாது தனது பெயரையும், இதழியல் அறத்தையும் தொலைத்துவிட்டு தரம் தாழ்ந்தது குமுதம் ரிப்போர்ட்டர்.

'லவ் ஜிஹாத்' என்ற குதர்க்கமான பிரச்சார வாசகத்தை வைத்து நாட்டையே கலவரக்காடாக்க சங்பரிவார் திட்டமிட்டிருப்பதும் அதற்கு நாட்டின் அதிமுக்கிய துறைகளில் உள்ள பொறுப்பு வாய்ந்த பெரிய மனிதர்களும், சில நச்சு சிந்தனை கொண்ட ஊடகங்களும் துணை போகும் கொடுமையை விலாவாரியாக விவரிக்கத் தொடங்கினால் நெஞ்சம் கொதித்துப் போகும்.

சமீபத்தில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள், இரண்டு முஸ்லிம் இளைஞர்களைக் காதலித்து பின்னர் இஸ்லாமிய நெறியை ஏற்றுக்கொண்டு திருமணமும் முடித்துக் கொண்டனர். இரண்டு பெண்களில் ஒருவர் கேரள மாநில பாரதீய ஜனதா தலைவர் ஒருவரின் மகள். மற்றொருவர் கேரள மாநில போலீஸ் உயர் அதிகாரியின் மகள். (இந்த விவரங்களை குமுதம் ரிப்போர்ட்டர் சாமர்த்தியமாக மறைத்துவிட்டது).

இந்த இரண்டு இளம்பெண்களும் இஸ்லாத்தைப் பற்றி அறிந்துகொள்ள மதரஸா என்னும் மார்க்க கல்விக்கூடத்தில் சேர்ந்து இஸ்லாமியக் கல்வி கற்றனர்.

இந்த நிலையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இரண்டு பெண்களின் அப்பாக்களும் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் என்று அழைக்கப்படும் ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இளம்பெண்கள் இருவரும் ஹிஜாபுடன் நீதிமன்றத் தில் ஆஜர் ஆனார்கள். ஹிஜாபுடன் வந்த ஹிந்து பெண்கள் என ஒரு பதட்டப்பிரச்சாரத்தை மீடியாக்கள் பரப்பின. இரண்டு இளம் பெண்களின் தகப்பன்மார்களும் தங்கள் பெண்களை வற்புறுத்தி மிரட்டி மதம் மாறச் செய்தனர் என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.

ஆனால், அது அவதூறு நிறைந்த பொய்ப் புகார் என்பதை நீதிமன்றத்திற்கு வந்த இரண்டு இளம் பெண்களும் நிரூபித்தனர். கட்டாயப்படுத்தி மதம் மாற்றியிருந்தால் அவர்கள் ஏன் ஹிஜா புடன் நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என்ற கேள்வி அனைவரின் உள்ளங்களிலும் எழுந்தது. ஆனால் இரண்டு இளம் பெண்களும்.... ஹிஜாபுடன் நீதிமன்றம் வந்த தகவலை வெளியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் கட்டாயப் படுத்தி மதம் மாற்றப்பட்டனர் என்று வெளியிட்டது. தன்னையறியாமல் உண்மையைக் கூறியதோடு உளறியும் கொட்டியது.

இரண்டு முஸ்­லிம் இளைஞர்களுக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டதால் இரண்டு இளைஞர்களும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் நீதிபதி முஸ்லிம் இளைஞர்களின் கோரிக்கையை தள்ளுபடி செய்ததோடு, லவ் ஜிஹாத் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என உள்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

லவ் ஜிஹாத் என்ற சொல் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. உள்ளிட்ட தீவிர மதவெறி அமைப்புகள் திட்டமிட்டு பரப்பிய பொய் வாதமாகும். லவ் ஜிஹாத் குறித்து மதவெறி அமைப்புகள் பொதுக்கூட்டங்கள், துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு கேரளாவை பதட்டத்தின் பிடியில் ஆழ்த்தின. மதவெறி பிற்போக்கு சக்திகள் பயன் படுத்திய அதே வார்த்தையை மாண்புமிகு நீதிபதி பயன்படுத்தி, தான் எங்கிருந்து தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தியிருப்பதாகவேபடுகிறது.

காத­லிப்பதும், காதலுக்காக மதம் மாறுவதும், தொன்று தொட்டு நடை பெற்று வரும் ஒன்று தான். முஸ்லிம் இளைஞர்களை பிற சமூகப் பெண்கள் காத­லிப்பதும் மதம் மாறுவதும் பரவலாக இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம் ஆனால் இதனை உள்நோக்கத்தோடு பாசிஷ சக்திகள் பரப்புவது அவர்களது பிறவிக் குணம். ஆனால் நீதித்துறையில் உள்ள சிலரும், குமுதம் ரிப் போட்டர் போன்ற ஊடகங்களிலும் விஷவைரஸ்கள் புகுந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது. நாட்டில் வீண் பதட்டத்தையும், வன்முறையையும் விதைத்து அதை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கிறோம்.

-நன்றி தமுமுக

உறங்கும் எரிமலையின் உரிமைக்குரல்

Monday, October 19, 2009

சந்தூக் பயணம்


இதை பெரிதாக்க படத்தின் மீது கிளிக் செய்யவும்



-நன்றி சமரசம்

Monday, October 12, 2009

நபிவழியில் நம் ஹஜ்

ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதனை நீங்கள் அடைய வேண்டுமானால் இரண்டு நிபந்தனைகளை, பரிபூரணப்படுத்தியே ஆக வேண்டும். முதலாவது இக்லாஸ் (அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜை நிறைவேற்றுவது) இரண்டாவது நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே ஹஜ்ஜை நிறைவேற்றுவது. ஹஜ்ஜைப்பற்றிய சரியான தெளிவு இல்லாமல் இன்று பல ஹாஜிகள், ஹஜ் கிரியைகளை தவறான முறையில் செய்கின்றார்கள். நபியவர்கள் செய்த ஹஜ்ஜை சுருக்கமாகச் சொல்லி விளங்கவைப்பதினால் இத்தவறுகளை நீக்கலாம் என்ற நன்னோக்கோடு இச்சிறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

என்னிடமிருந்து உங்களின் ஹஜ் கடமைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே இதைப்படித்து நபியவர்களின் ஹஜ்ஜைப் போன்றே நீங்களும் செய்யுங்கள். அல்லாஹ் நமது ஹஜ்ஜை ஏற்று “அன்று பிறந்த பாலகனை” போன்றும், ஹஜ்ஜின் கூலியாகிய சுவர்க்கத்தைப் பெற்றவர்களாகவும் ஆக்கியருள்வானாக.

உம்ராச் செய்யும் முறை

உம்ரா செய்வதற்கு முன் குளித்து நறுமணம் பூசிக்கொண்டு இஹ்ராம் உடையை அணிந்த பின் “லப்பைக்க உம்ரத்தன்” என்று உரிய எல்லையிலிருந்து (மீக்காத்திலிருந்து) நிய்யத்து வைத்துக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட வேண்டும். (இலங்கை, இந்தியாவிலிருந்து வருபவர்களின் எல்லை யலம்லம்) இஹ்ராம் அணியும் எல்லைக்குள் வசிப்பவர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து நிய்யத்து வைத்துக் கொள்ள வேண்டும். இஹ்ராம் உடை என்பது ஆண்களுக்கு இரண்டு தைக்கப்படாத துணிகளை அணிவதாகும். ஒரு துணியை உடுத்துக்கொள்வது, மற்ற துணியால் தன் மேனியை போர்த்திக் கொள்வது. பெண்களுக்கு தனி இஹ்ராம் உடை கிடையாது. அவர்கள் தங்களுடைய அங்கங்கள் மறையும் அளவுக்கு இஸ்லாம் அனுமதித்த எந்த ஆடையையும் அணிந்து கொள்ளலாம். மக்கா செல்லும் வரை தல்பியா சொல்லிக் கொண்டு செல்வது சுன்னத்தாகும்.

لَبَّيْكَ أَللَّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّبيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكُ، لاَشَرِيْكَ لَكَ.லைப்பைக், அல்லாஹும்ம லைப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க், லாஷரீக்க லக்.

ஹரத்திற்குள் நுழைவதற்கு முன் தல்பியாவை நிறுத்திக் கொண்டு வலது காலை முன் வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.

بِسْمِ اللهِ وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى رَسُوْلِ اللهِ أَللَّهُمَّ إفْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ.பிஸ்மில்லாஹ், வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ், அல்லாஹும்மஃப்தஹ்லி அப்வாப ரஹ்மத்திக.

ஹரத்திற்குள் நுழைந்ததும் முதலில் தவாபை ஆரம்பிக்க வேண்டும். தவாப் என்பது கஃபத்துல்லாவை ஏழு முறை பரிபூரணமாகச் சுற்றி வருவதற்கு சொல்லப்படும். தவாபுக்கு ஒளு அவசியமாகும். தவாபை ஆரம்பிப்பதற்கு முன் ஆண்கள் தங்களின் வலது தோள் புஜத்தை திறந்துவிட வேண்டும். அதாவது மேனியை போர்த்தியிருக்கும் துணியின் நடுப்பகுதியை வலது கக்கத்தின் கீழ் வைத்துக் கொண்டு அத்துணியின் இரு ஓரங்களையும் இடது தோள் மீது போட வேண்டும். அதன் பின் உம்ராவிற்குரிய தவாபை நிறைவேற்றுகின்றேன் என்ற எண்ணத்தோடு “ஹஜருல் அஸ்வத்” கல் பொருத்தப்பட்டிருக்கும் மூலையிலிருந்து உம்ராவின் தவாபை ஆரம்பிக்க வேண்டும். தவாபை ஆரம்பிக்கும் போது நான்கு முறைகளில் ஒன்றைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.

1- முடியுமாக இருந்தால் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது.
2- அதற்கு முடியாவிட்டால் கையினால் ஹஜருல் அஸ்வத் கல்லை தொட்டு கையை முத்தமிடுவது.
3- அதற்கும் முடியாவிட்டால் ஹஜருல் அஸ்வத் கல்லை, தடிபோன்றதால் தொட்டு அதை முத்தமிடுவது.
4- அதற்கும் முடியாவிட்டால் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக நின்று தன் வலது கையை அதன்பக்கம் உயர்த்திக்காட்டி “அல்லாஹுஅக்பர்” என்று சொல்வது. (இப்போது கையை முத்தமிடக்கூடாது).


இந்நான்கில் முடியுமான ஒன்றைச் செய்துவிட்டு தவாபை ஆரம்பிக்க வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட வேண்டுமென்பதற்காக மற்றவர்களை இடித்துக் கொண்டு செல்வதை ஹாஜிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது சுன்னத்தாகும். மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பது ஹராமாகும். ஹராத்தைச் செய்து சுன்னத்தை நிறைவேற்ற வேண்டுமா? குறிப்பாக பெண்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கஃபத்துல்லாவோடு சேர்ந்து ஓர் அரைவட்டம் இருக்கின்றது, அதையும் சேர்த்து தவாப் செய்ய வேண்டும், காரணம் அதுவும் கஃபத்துல்லாவின் எல்லைதான். ருக்னுல் யமானியை, (ஹஜருல் அஸ்வத் கல் மூலைக்கு முன்னுள்ள மூலையை) தொட வாய்ப்புக் கிடைத்தால் தொட்டுக்கொள்ள வேண்டும். அதை முத்தமிடுவதோ அல்லது தொட்டு கையை முத்தமிடுவதோ அல்லது தொட வாய்ப்புக் கிடைக்காத நேரத்தில் அதன் பக்கம் கையை உயர்த்திக் காட்டி அல்லாஹுஅக்பர் என்று கூறுவதோ கூடாது. முந்திய மூன்று சுற்றுக்களிலும் “ரம்ல்” செய்வது சுன்னத்தாகும். “ரம்ல்” என்பது கால் எட்டுக்களை கிட்ட வைத்து வேகமாக நடப்பதற்குச் சொல்லப்படும். மற்ற நான்கு சுற்றுக்களையம் சாதாரணமான நடையில் நடப்பது. “ரம்ல்” செய்வது ஆண்களுக்கு மாத்திரம்தான் சுன்னத்தாகும். பெண்களுக்கல்ல.

ஒவ்வொரு சுற்றுக்களுக்கும் மத்தியில் குறிப்பிட்ட துஆக்கள் எதுவும் இல்லை, விரும்பிய துஆக்களைக் கேட்கலாம். தஸ்பீஹ், திக்ர் செய்தல், குர்ஆன் ஓதுதல் போன்றவைகளை, செய்து கொள்ளலாம். ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வத் கல் பொருத்தப்பட்டிருக்கும் மூலை வரையுள்ள இடத்தில்

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَاحَسَنَةًوَفِي اْلآخِرَةِ حَسَنَةً وَقِنَاعَذَابَ النَّارِ“ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்”

என்ற துஆவை ஓதுவது சுன்னத்தாகும். ஒவ்வொரு சுற்றை ஆரம்பிக்கும் போதும் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக வரும்போது தக்பீர் (அல்லாஹுஅக்பர் என்று) கூறுவது சுன்னத்தாகும். தவாப் செய்து முடிந்ததும் திறந்த வலது தோள்புஜத்தை மூடிக்கொள்ள வேண்டும். பின்பு மகாமுல் இப்ராஹிமுக்குப் பின் சென்று தவாபுடைய சுன்னத் இரு ரக்அத்துகளை தொழ வேண்டும். முந்திய ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் காஃபிரூனும் (குல்யாஅய்யுஹல் காஃபிரூன்) இரண்டாவது ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் இக்லாஸையும் (குல்ஹுவல்லாஹுஅஹது) ஓதுவது சுன்னத்தாகும். முகாமுல் இபுறாஹிமுக்குப்பின் இட நெருக்கடியாக இருந்தால் கிடைக்கும் இடத்தில் தொழுதுகொள்ளலாம்.

ஸஃயி

ஸஃயி என்பது ஸஃபா மர்வா மலைகளுக்கு மத்தியில் ஏழு சுற்றுக்கள் சுற்றுவதாகும். தவாப் முடிந்த பின் ஸஃயி செய்வதற்காக ஸஃபா மலைக்குச் செல்லவேண்டும். ஸஃபா மலையடிவாரத்தை அடைந்ததும்

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِஎன்னும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிவிட்டு அல்லாஹ் எதைக்கொண்டு ஆரம்பித்தானோ அதைக் கொண்டு நாமும் ஆரம்பிப்போம் என்று சொல்லி ஸஃபா மலை மீது கஃபத்துல்லாவை பார்க்கும் அளவுக்கு ஏறி கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி பெருமைப்படுத்தி அவனைப்புகழ்ந்து

لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٍ، لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ اْلأَحْزَابَ وَحْدَهُலாஇலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹ், லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர். லாஇலாஹா இல்லல்லாஹுவஹ்தஹ், அன்ஜஸ வஃதஹ், வநஸர அப்தஹ், வஹஸமல் அஹ்சாப வஹ்தஹ்.

என்னும் திக்ருகளை ஓதி இடையே துஆக்களும் செய்தார்கள். இப்படி மூன்று தடவைகள் செய்தார்கள். (அபூதாவூத், நஸாயி, இப்னுமாஜா, தாரமி, தப்ரானி)

இந்த திக்ருகளை நாமும் ஓதி இவைகளுக்கு இடையே நமக்காக துஆக்கள் செய்வதும் சுன்னத்தாகும். இன்று சிலர் தொழுகைக்குத் தக்பீர் கூறுவது போல் இரு கைகளையும் கஃபத்துல்லாவின் பக்கம் உயர்த்திக் காட்டிவிட்டுச் செல்கின்றார்கள். இது சுன்னத்தான முறையல்ல. துஆவுக்கு மாத்திரமே கையை உயர்த்த வேண்டும். பின்பு ஸஃபா மலையிலிருந்து இறங்கி மர்வாவை முன்னோக்கிச் செல்ல வேண்டும், முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரைக்கும் சிறிது வேகமாக ஓட வேண்டும். அதன்பிறகு சாதாரணமாக நடக்க வேண்டும். இப்படி வேகமாக ஓடுவது ஆண்களுக்கு மட்டும்தான் பெண்களுக்கல்ல. மர்வா மலையை அடைந்ததும் அதன்மீது ஏறி கிப்லாவை முன்னோக்கி ஸஃபா மலையில் செய்தது போன்றே செய்வது சுன்னத்தாகும். இத்தோடு ஒரு சுற்று முடிவுறுகின்றது. பின்பு மர்வாவிலிருந்து ஸஃபா வரைக்கும் செல்வது, இங்கும் இரு பச்சை விளக்குகளுக்கு மத்தியில் சற்று வேகமாக ஓடுவது சுன்னத்தாகும். ஸஃபா மலையை அடைந்தால் இரண்டாவது சுற்று முடிவுறுகிறது. இப்படி ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும், மர்வாவில்தான் கடைசிச் சுற்று முடிவுறும். ஒவ்வொரு சுற்றுக்கும் இடையில் தனிப்பட்ட பிரார்த்தனைகள் இல்லை.

விரும்பிய பிரார்த்தனைகள், திக்ருகள், குர்ஆன் போன்றவைகளை ஓதலாம். இப்படிப்பட்ட சிறப்பான இடங்களில் மனமுருக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தியுங்கள். தவாப் மற்றும் ஸஃயியை கீழ் தளத்தில் செய்ய முடியாவிட்டால் (கூட்டமாக இருந்தால்) மேல்மாடியில் செய்து கொள்ளலாம்.

ஸஃயின் ஏழு சுற்றுக்களும் முடிவடைந்தபின் ஆண்கள் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும், இதுவே சிறந்த முறையாகும். மொட்டை அடிக்காதவர்கள் முடியை குறைத்துக் கொள்ள வேண்டும். முடியை குறைத்துக் கொள்வதென்பது இரண்டு அல்லது மூன்று இடங்களில் சில முடிகளை மட்டுமே கத்தரிப்பது என்பதல்ல, மாறாக தலையில் உள்ள எல்லா முடிகளும் கொஞ்ச அளவுக்காவது கத்தரிக்கப்பட வேண்டும், இதுவே நபிவழியாகும். பெண்கள் தங்களின் தலைமுடியின் நுனியில் விரல் நுனியளவுக்கு வெட்டிக் கொள்ள வேண்டும், இதுவே அவர்களுக்கு சுன்னத்தான முறையாகும், இத்துடன் உம்ராவின் செயல்கள் பரிபூரணமடைந்துவிட்டன. அல்லாஹ் நமது உம்ராவையும் மற்ற அமல்களையும் ஏற்றுக் கொள்வானாக.

குறிப்பு:- தவாஃபிலும் ஸஃயிலும் ஏழு சுற்றுக்களையும் ஒரே நேரத்தில் சுற்ற முடியாதவர்கள் இடையில் களைப்பாறிவிட்டு பின்பு மீதமுள்ள சுற்றுக்களைத் தொடருவதில் தவறில்லை.

ஹஜ் செய்யும் முறைகள்

ஹஜ்ஜின் வகைகள் மூன்று

1. ஹஜ்ஜுத்தமத்துஃ
2. ஹஜ்ஜுல் கிரான்
3. ஹஜ்ஜுல் இஃப்ராத்


ஹஜ்ஜுத் தமத்துஃ :-

ஹஜ்ஜுடைய மாதத்தில் (ஷவ்வால், துல்கஃதா, துலஹஜ்) ஹஜ்ஜுக்கான உம்ராவைச் செய்து அதே வருடத்தில் ஹஜ்ஜையும் செய்வதற்குச் சொல்லப்படும். ஹஜ்ஜுக்குச் செல்லும்போது குர்பானி கொடுக்கும் பிராணியை, தன்னுடன் கூட்டிக் கொண்டு செல்லாதவர்களுக்கு இதுவே சிறந்த முறையாகும். ஹஜ்ஜுத்தமத்துஃ செய்பவர் உம்ராவை முடித்துவிட்டால் ஹஜ்ஜுக்காக நிய்யத் வைக்கும் வரை, இஹ்ராமினால் ஹராமாக்கப்பட்டிருந்த அனைத்தும் ஹலாலாகிவிடும், துல்ஹஜ் 8-ஆம் நாள் காலையில் தங்கியிருக்கும் இடத்தில் இருந்தே ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்துக் கொண்டு இஹ்ராமை அணிந்து மினாவிற்குச் செல்ல வேண்டும்.

ஹஜ்ஜுல் கிரான் :-

ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து ஒரே நிய்யத்து வைப்பது. யார் தன்னுடன் குர்பானிக்குரிய பிராணியை, கொண்டு செல்கின்றார்களோ அவர்களுக்கு இதுவே சிறந்த முறையாகும். இந்த முறையில்தான் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுசெய்தார்கள்.

ஹஜ்ஜுல் இஃப்ராத் :-

இம்முறையில் குர்பானி கடமையில்லை. ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜுக்கு மட்டும் நிய்யத்து வைப்பதாகும்.

கிரான் மற்றும் இஃப்ராத் முறைகளில் ஹஜ் செய்பவர்கள் மக்கா வந்ததும் தவாப் செய்ய வேண்டும். இதற்கு தவாபுல் குதூம் என்று சொல்லப்படும். தவாபுல் குதூமுக்குப் பின் ஸஃயி செய்பவர்கள் 10-ஆம் நாள் தவாபுல் இஃபாலாவுக்குப் பின் ஸஃயி செய்யத்தேவையில்லை. இப்போது ஸஃயி செய்யாதவர்கள் தவாபுல் இஃபாலாவுக்குப்பின் ஸஃயி செய்தே ஆகவேண்டும்.

துல்ஹஜ் பிறை 8-ஆம் நாள்

மேலே கூறப்பட்ட மூன்று முறைகளில் ஹஜ் செய்பவர்களும் துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் மினாவிற்குச் செல்ல வேண்டும். மினாவில் லுஹர், அஸர், மஃரிப், இஷா, ஸுப்ஹுத் தொழுகைகளை உரிய நேரத்தில் தொழ வேண்டும். நான்கு ரக்அத்துத் தொழுகைகளை இரண்டாக சுருக்கித் தொழவேண்டும். இப்படித்தான் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதார்கள்.

துல்ஹஜ் பிறை 9-ஆம் நாள்

துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் சூரியன் உதித்தபின் அரஃபா செல்ல வேண்டும். அரஃபா சென்றதும் அரஃபா எல்லையை உறுதிப் படுத்தியபின் மஃரிப் தொழுகையின் நேரம் வரும் வரை அங்கேயே தங்கி இருப்பது அவசியமாகும். லுஹருடைய நேரம் வந்ததும் பாங்கும், இகாமத்தும் கூறி லுஹரை இரண்டு ரக்அத்தாக சுருக்கித் தொழ வேண்டும். லுஹர் தொழுகை முடிந்ததும் இகாமத் கூறி அஸர் தொழுகையையும் இரண்டு ரக்அத்தாக சுருக்கி லுஹருடன் முற்படுத்தித் தொழ வேண்டும். முன் பின் சுன்னத்துக்கள் இல்லை. தொழுகை முடிந்ததும் ஓர் இடத்தில் அமர்ந்து வணக்கத்தில் ஈடுபடவேண்டும். அரஃபாவுடைய தினம் மிக, சிறப்பான தினமாகும். ஹஜ் என்றால் அரஃபாவில் தங்குவதுதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹாஜிகளின் இத்தியாகத்தைப் பார்த்து மலக்குகளிடம் அல்லாஹ் பெருமைப்படும் நாளாகும். ஆகவே, அங்குமிங்கும் அலைந்து திரியாமல் உருக்கமான முறையில் உங்களின் ஈருலக வெற்றிக்காகவும், உலக முஸ்லிம்களுக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அந்நாளில் செய்யும் வணக்கங்களில் மிக மேலானது துஆச் செய்வதாகும்.

நபி (ஸல்) வஸல்லம் அவர்கள் (தொழுகையை முடித்து விட்டு,) அரஃபா மலையடிவாரத்தில் நின்றவர்களாக, கிப்லாவை முன்னோக்கி சூரியன் மறையும் வரை துஆச்செய்தார்கள். (முஸ்லிம்)
அந்நாளில் செய்யும் திக்ருகளில் மிகச் சிறந்தது பின்வரும் திக்ராகும். நானும் எனக்கு முன்வந்த நபிமார்களும் கூறியவையில் மிகச் சிறந்தது

لااِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءِ قَدِيْرٍ .
லாஇலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹ், லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர். என நபி (ஸல்) வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அரஃபாவுடைய எல்லைக்குள் எங்கும் தங்கிஇருக்கலாம். ஜபலுர் ரஹ்மாவிற்க்குப் போய் அங்கிருந்து பிரார்த்தனை செய்யவேண்டும் என்று நினைத்து, பல சிரமங்களுக்கு மத்தியில் அங்கு சென்று அன்றைய நாளையே வீணாக்கிவிடாமல் கிடைத்த இடத்தில் அமர்ந்து, ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் முடியுமான அமல்களைச் செய்யுங்கள். நபி (ஸல்) அவர்கள் ஜபலுர்ரஹ்மா மலைமீது ஏறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “நான் இந்த இடத்தில்தான் தங்கினேன், அரஃபாவின் எல்லைக்குள் எங்கும் தங்கலாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், அஹ்மத்)

நபி (ஸல்) அவர்களே அரஃபாவின் எல்லைக்குள் எங்கு தங்கினாலும் ஒரே நன்மைதான் என்று சொல்லியிருக்கும் போது எதற்காக ஜபலுர்ரஹ்மாவிற்குச் செல்ல வேண்டும்? ஹாஜிகள் இதை கவனத்தில் கொள்வது அவசியம்.

குறிப்பு : யார் அரஃபா எல்லைக்கு வெளியில் தங்கி இருக்கின்றாரோ அவருடைய ஹஜ்ஜு ஏற்கப்படாது, இன்னும் அரஃபா தினத்தன்று ஹாஜிகள் நோன்பு நோற்கக்கூடாது.
முஸ்தலிஃபாவில் இரவில் தங்குவது

ஒன்பதாம் நாளின் சூரியன் மறைந்ததும் தல்பியா கூறியவர்களாக அமைதியான முறையில் முஸ்தலிஃபா செல்ல வேண்டும். முஸ்தலிஃபா சென்றதும் ஓர் பாங்கு இரண்டு இகாமத்தில் மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து இஷாவை இரண்டு ரகஅத்தாக சுருக்கித் தொழ வேண்டும். முன் பின் சுன்னத்துக்கள் இல்லை. சுப்ஹுவரை அங்கு தங்குவது அவசியமாகும். முஸ்தலிஃபாவிற்குள் எங்கும் தங்கலாம்.
நான் இங்குதான் தங்கினேன், முஸ்தலிஃபாவிற்குள் எங்கும் தங்கலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

நோயாளிகள், பெண்கள் நடு இரவுக்குப்பின் அவர்கள் விரும்பினால் மினா செல்லலாம். நபி (ஸல்) அவர்கள் இதை அனுமதித்துள்ளார்கள்.

சுபஹுடைய நேரம் வந்ததும் சுபஹுத் தொழுகையை தொழுதுவிட்டு சூரியனின் மஞ்சள் நிறம் வரும் வரை அல்லாஹ்வை, போற்றிப்புகழ்ந்து அவனைப் பெருமைப்படுத்தக்கூடிய திக்ருகளைக் கூறுவதும்; கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வதும் சுன்னத்தாகும்.

நபி (ஸல்) அவர்கள் மஸ்அருல் ஹராம் என்னும் மலைமீது ஏறி கிப்லாவை முன்னோக்கி நின்று சூரியனின் மஞ்சள் நிறம் வரும் வரை நின்ற நிலையில் பிரார்த்தனை செய்தார்கள்.(அபூதாவூத்)
இன்னும் ஓர் அறிவிப்பில்:-

அல்லாஹ்வைப் போற்றிப்புகழ்ந்து அல்லாஹுவைப் பெருமைப்படுத்தி, ஒருமைப்படுத்தும் திக்ருகளை ஓதினார்கள்.

துல் ஹஜ் பிறை 10-ஆம் நாள்

சூரியன் உதயமாகுவதற்கு முன் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு தல்பியா கூறியவர்களாக மினா வர வேண்டும். 10-ஆம் நாள் மினாவில் செய்யும் நான்கு அமல்கள்.

1- ஜம்ரத்துல் அகபாவிற்கு மாத்திரம் ஏழு கற்களை வீசுவது.
2- குர்பானி கொடுப்பது.
3- முடி எடுப்பது.
4- தவாபுல் இஃபாலா செய்வது.


சொல்லப்பட்ட வரிசைப்பிரகாரம் செய்வதே சுன்னத்தாகும். ஒன்றைவிட மற்றொன்றை முற்படுத்தியோ பிற்படுத்தியோ செய்தாலும் தவறில்லை. பத்தாம் நாள் நபி (ஸல்) அவர்களிடம் பல ஸஹாபாக்கள் வந்து ஒன்றை முற்படுத்தி செய்துவிட்டேன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்கும் போதெல்லாம் பரவாயில்லை என்றே நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

கல் எறிவது

பத்தாம் நாள் எறியும் கற்களை காலை சூரிய உதயத்திலிருந்து ளுஹர் நேரத்துக்குள் எறிய வேண்டும். இந்த நேரத்திற்குள் எறிய முடியாதவர்கள் இதற்குப் பின்னும் எறியலாம்.

பத்தாம் நாள் ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! மாலையான பின்புதான் நான் கல் எறிந்தேன் என்றார், பரவாயில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) எறியும் கல்லின் அளவு சுண்டுவிரலால் வீசும் கல் அளவிற்கு இருக்க வேண்டும். அதை ஒவ்வொரு கற்களாக “அல்லாஹுஅக்பர்” என்று சொல்லிக் கொண்டு எறிய வேண்டும். ஏழு கற்களையும் ஒரே தடவையில் எறியக்கூடாது.

“சுண்டு விரலால் வீசக்கூடிய கற்களைப் போன்று ஏழு கற்களை நபி (ஸல்) அவர்கள் வீசினார்கள். ஒவ்வொரு கற்களை வீசும் போதும் தக்பீர் கூறினார்கள்” என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூதாவூத், பைஹகி)

கல் எறிவதற்கு முடியாத நோயாளி மற்றும் பலவீனர்களின் கல்லை இன்னும் ஒருவர் அவருக்குப் பகரமாக எறியலாம். ஏறியக்கூடியவர் அவ்வருடம் ஹஜ்ஜு செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். அவருடைய கல்லை எறிந்த பின்புதான் மற்றவரின் கல்லை எறிய வேண்டும். தனக்கு கல் எறிய சக்தி இருக்கும் போது பிறரை எறியச் சொல்லக்கூடாது.

குர்பானி கொடுப்பது

தமத்துஃ மற்றும் கிரான் முறைப்பிரகாரம் ஹஜ் செய்பவர்கள் கல் எறிந்ததற்குப் பிறகு குர்பானி கொடுக்க வேண்டும். அதாவது ஒட்டகம், மாடு, ஆடு இவைகளில் ஒன்றை அல்லாஹ்வுக்காக அறுப்பது. ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தை அல்லது ஒரு மாட்டை அறுக்கலாம். ஆடு கொடுப்பதாக இருந்தால் ஒருவருக்கு ஒன்று வீதம் கொடுக்க வேண்டும். இஃப்ராது முறையில் ஹஜ் செய்தவருக்கு குர்பானி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. குர்பானியை மினாவிலும், மக்காவின் எல்லைக்குள் எங்கும் அறுக்கலாம், ஆனால் ஹரம் எல்லைக்கு வெளியில் அறுக்கக்கூடாது. “நான் இந்த இடத்தில்தான் குர்பானி கொடுத்தேன். மினாவில் எங்கும் குர்பானி கொடுக்கலாம். மக்காவின் தெருக்கள் எல்லாம் நடக்கும் பாதையும் குர்பானி கொடுக்கும் இடமுமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத்)

குர்பானி இறைச்சியிலிருந்து அதைக் கொடுத்தவரும் உண்ணலாம்

குர்பானி கொடுக்கும் இறைச்சியிலிருந்து மினாவுடைய மூன்று நாட்களை (பிறை 11,12,13) தவிர (வேறு நாட்களில்) நாங்கள் உண்ணாமலிருந்தோம். நீங்களும் (அந்த இறைச்சியைச்) சாப்பிட்டு, சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அனுமதித்த போது நாங்களும் சாப்பிட்டோம், சேமித்தும் வைத்தோம். மதீனாவிற்கும் அவ்விறைச்சியை கொண்டு செல்லும் அளவு எங்களிடம் இருந்தது என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்)
குர்பானி கொடுப்பதற்கு வசதியற்றவர் ஹஜ்ஜுடைய நாட்களில் மூன்று நோன்புகளும், ஊர்; திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும்.

தலை முடி எடுப்பது

குர்பானி கொடுத்த பின் தலை முடியை எடுக்க வேண்டும். (முடி எடுக்கும் முறை முன்னால் சொல்லப்பட்டுவிட்டது) முடியை எடுத்ததும் இஹ்ராமிலிருந்து நீங்கிக் கொள்ளலாம். அதாவது கணவன் மனைவி தொடர்பைத்தவிர இஹ்ராத்தினால் தடுக்கப்பட்டிருந்தவைகள் எல்லாம் ஆகுமாகிவிடும். தவாபுல் இஃபாலாவைச் (ஹஜ்ஜுடைய தவாபை) செய்துவிட்டால் கணவன் மனைவி உறவும் ஆகுமாகிவிடும்.

தவாஃபுல் இஃபாலா

தலை முடி எடுத்த பின் குளித்து மணம்பூசி தனது வழமையான ஆடையை அணிந்து கொண்டு தவாபுல் இஃபாலா செய்வதற்காக மக்கா செல்ல வேண்டும். தமத்துஆன முறையில் ஹஜ் செய்பவர்கள் தவாபுல் இஃபாலாவை முடித்துவிட்டு ஹஜ்ஜுக்கான சஃயும் செய்ய வேண்டும். கிரான் மற்றும் இஃப்ராதான முறையில் ஹஜ் செய்பவர்கள் மக்கா வந்தவுடன் செய்த தவாபுல் குதூமுக்குப் பின் சஃயி செய்திருந்தால் இப்போது தவாபுல் இஃபாலா மாத்திரம் செய்தால் போதும், சஃயி செய்யத் தேவையில்லை. தவாபுல் குதூமுக்குப் பின் சஃயி செய்யவில்லையென்றால் இப்போது (தவாபுல் இஃபாலாவுக்குப் பின்) சஃயி செய்தே ஆக வேண்டும். தவாப் மற்றும் சஃயை முடித்ததும் மினா சென்று 11-ஆம் இரவில் மினாவில் தங்குவது அவசியமாகும்.

துல் ஹஜ் பிறை 11-ஆம் நாள்

11-ஆம் நாள் ளுஹருடைய நேரம் வந்ததிலிருந்து சூரியன் மறைவதற்கு முன் மூன்று ஜம்ராக்களுக்கும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும். முதலில் சிறிய ஜம்ராவிற்கும், இரண்டாவது நடு ஜம்ராவிற்கும், மூன்றாவது பெரிய ஜம்ராவிற்கும் எறிய வேண்டும். முதலாவது ஜம்ராவிற்கு கல் எறிந்த பின் வலது பக்கம் சற்று முன்னால்; சென்று கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வது சுன்னத்தாகும். இரண்டாவது ஜம்ராவிற்கு கல் எறிந்த பின் இடது பக்கம் சற்று முன்னால் சென்று கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வது சுன்னத்தாகும். மூன்றாவது ஜம்ராவிற்க்குப்பின் துஆச் செய்வது சுன்னத்தல்ல.

துல் ஹஜ் பிறை 12-ஆம் நாள்

12-ஆம் இரவும் மினாவில் தங்குவது அவசியமாகும். 12-ஆம் நாளும் 11-ஆம் நாளைப் போன்றே மூன்று ஜம்ராக்களுக்கும் ளுஹர் தொழுகையின் நேரத்திற்குப் பின் கல் எறிய வேண்டும். 12-ஆம் நாளோடு ஹஜ்ஜுக் கடமையை முடித்துவிட்டுச் செல்ல விரும்புபவர்கள் சூரியன் மறைவதற்கு முன் மினா எல்லையை விட்டும் வெளியாகிவிட வேண்டும். 13-ஆம் நாளும் மினாவில் தங்க விரும்புபவர்கள் 13-ஆம் இரவும் மினாவில் தங்கிவிட்டு 13-ஆம் நாள் ளுஹர் நேரத்திற்க்குப் பின் மூன்று ஜம்ராக்களுக்கும் கல் எறிந்துவிட்டு மக்கா செல்ல வேண்டும். 10,11,12,13-ஆம் நாட்களில் மினாவில் ஒவ்வொரு தொழுகையையும் உரிய நேரத்தில் தொழ வேண்டும். நான்கு ரக்அத்துத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துக்களாக, சுருக்கித் தொழ வேண்டும். மாதவிடாய் மற்றும் பிரசவத் தீட்டு ஏற்பட்ட பெண்கள் தவாப் மற்றும் தொழுகையைத்தவிர ஹஜ்ஜுடைய மற்ற எல்லா அமல்களையும் செய்யலாம். சுத்தமானதும் விடுபட்ட தவாபை நிறைவேற்ற வேண்டும்.

தவாஃபுல் விதா

ஹஜ் கடமையை முடித்துவிட்டு தன்வீடு செல்ல விரும்புபவர்கள் கடைசியாகச் செய்யும் அமல் தவாபுல் விதாவாகும். தவாபுல் விதா என்பது கஃபத்துல்லாவிலிருந்து விடை பெற்றுச் செல்லும் தவாபாகும். அதுவே ஹஜ் செய்பவரின் கடைசி அமலாகும். தவாபுல் இஃபாலாவை முடித்த ஒரு பெண் மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தத்தின் காரணமாக தவாபுல் விதாவைச் செய்ய முடியாவிட்டால் அப்பெண்ணிற்கு மாத்திரம் தவாபுல் விதாவை விடுவதற்கு அனுமதி உண்டு. மற்ற எல்லா ஹாஜிகளும் அதை நிறைவேற்றுவது அவசியமாகும். மக்காவிலுள்ள எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடைசியாக தவாபுல் விதாவைச் செய்ய வேண்டும். தவாபுல் விதா முடிந்ததும் பயணத்தைத் தொடங்க வேண்டும். இத்துடன் ஹஜ் கடமை முடிவடைகின்றது. சிலர் தவாபுல் விதாவை செய்து விட்டு கல் எறிகின்றார்கள். இது முற்றிலும் தவறாகும். அவர் மீண்டும் தவாபுல் விதா செய்ய வேண்டும். இன்னும் சிலர் தவாபுல் விதாவை முடித்துவிட்டுச் செல்லும் போது கஃபாவை பார்த்துக் கொண்டே பின்னோக்கி வருகின்றார்கள், இதுவும் தவறாகும். அல்லாஹ் நம் அனைவரின் ஹஜ் கடமைகளையும் ஏற்று அன்று பிறந்த பாலகனைப் போன்று தன் தாயகம் திரும்ப நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக!

இஹ்ராம் அணிந்தவர் தவிர்க்க வேண்டியவைகள்

1-உடலிலுள்ள முடியையோ, நகங்களையோ எடுப்பது.
2-உடல், ஆடைகள், உணவு, குடிபானம் ஆகியவைகளில் மணம் பூசுவது.
3-பூமியிலுள்ள உயிர்ப்பிராணிகளைக் கொல்வது அல்லது வேட்டையாடுவது, விரட்டுவது.
4-இஹ்ராமிலும், இஹ்ராமில்லாத நிலையிலும் ஹரமின் எல்லைக்குள் உள்ள மரம் செடிகளை வெட்டுவது.
5-தவறி விடப்பட்ட பொருட்களை எடுப்பது. ஆனால் உரியவர்களிடம் கொடுக்க முடியுமாக இருந்தால் மட்டும் எடுக்கலாம்.
6-இஹ்ராம் அணிந்தவர் திருமணம் செய்யவோ, அல்லது முடித்து கொடுக்கவோ, தனக்கோ அல்லது பிறருக்கோ திருமணம் பேசவோ கூடாது. இன்னும் பெண்ணுடன் உடலுறவு கொள்வது, காம உணர்வோடு கலந்துரையாடுவதும் கூடாது.


ஹஜ்ஜுடைய நேரத்தில் உடலுறவு கொண்டால் அந்த ஹஜ்ஜு சேராது. அதற்கு பரிகாரமாக ஓர் குர்பானி கொடுப்பதுடன் அடுத்த வருடம் மீண்டும் ஹஜ்ஜு செய்ய வேண்டும்.

ஆண்கள் மீது மாத்திரம் விலக்கப்பட்டவைகள்

தலையை, துணி போன்றவைகளால் மறைப்பது, சட்டையையோ அல்லது தையல் போடப்பட்ட எந்தவித உடைகளையோ உடம்பில் எந்த இடத்திலாவது அணிவது.
பெண்கள் மீது மாத்திரம் விலக்கப்பட்டவைகள்
இஹ்ராமுடைய நிலையில் பெண்கள் கையுறை அணிவது, முகத்தை புர்காவால் மூடுவது கூடாது. ஆனால் அன்னிய ஆண்களுக்கு முன் இருக்கும் போது முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.

அர்கானுல் ஹஜ் (ஹஜ்ஜின் கடமைகள்)

இவைகளைச் செய்யாமல் ஹஜ்ஜுநிறைவேறாது.

1-நிய்யத் வைப்பதோடு இஹ்ராம் உடை அணிதல்.
2-அரஃபாவில் தங்குதல்.
3-தவாபுல் இஃபாலா செய்தல்.
4-ஸஃபா மர்வா மலைக்கு மத்தியில் ஹஜ்ஜுடைய ஸஃயி செய்தல்.


ஹஜ்ஜுடைய வாஜிபுகள் (அவசியமானவைகள்)

(1) நபி (ஸல்) அவர்கள் கூறிய எல்லையிலிருந்து இஹ்ராம் அணிதல்.
(2) சூரியன் மறையும் வரை அரஃபாவில் தங்கி இருத்தல்.
(3) 10-ஆம் இரவு முஸ்தலிஃபாவில் தங்குதல்.
(4) 10-ஆம் நாள் காலையில் பெரிய ஜம்ராவிற்கு ஏழு கற்களும், 11, 12-ஆம் நாட்கள் மூன்று ஜம்ராக்களுக்கும் முறையே ஏழேழு கற்கள் வீதம் எறிதல், 13-ஆம் நாள் மினாவில் தங்குபவர்கள் 13-ஆம் நாளும் கல்லெறிய வேண்டும்.
(5) ஆண்கள் முடியை மழிப்பது அல்லது கத்தரிப்பது. பெண்கள் முடியின் நுனியில் விரலின் நுனியளவு கத்தரிப்பது.
(6) 11, 12-ஆம் இரவில் மினாவில் தங்குவது. (13-ஆம் நாள் விரும்பியவர்கள் மினாவில் தங்கலாம். இந்த இரவு தங்குவது அவசியமில்லை, ஆனால் சிறந்தது.)

(ஹஜ் செய்யும் போது) கெட்ட செயல்களில் ஈடுபடாமலும், தன் மனைவியோடு இல்லற உறவில் ஈடுபடாமலும் யார் ஹஜ் செய்கின்றாரோ அவர் அன்று பிறந்த பாலகரைப்போன்று (தன் தாயகம்) திரும்பிச் செல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

-இஹ்ராம் அணிந்திருக்கின்ற நிலையில் கடைபிடிக்க வேண்டியவைகள்


நன்றி: இஸ்லாம்கல்வி
நன்றி: C.O.C.G வெளியீடு, ஜித்தா

Thursday, October 8, 2009

உலக நாயகனிடம் வெளிப்பட்ட பார்ப்பன பக்தி


ஆரம்பப்பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றை கொஞ்ச காலத்துக்கு முன்பு காண நேர்ந்தது. தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் தேச பக்தர்கள் பாத்திரத்தில் குழந்தைகள் நடித்தார்கள். தீவிரவாதிகளாக நடித்த குழந்தைகள் நான்கு பேரும் தலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி வைத்திருந்தார்கள். தொப்பி என்பது மட்டுமே அவர்களைத் தீவிரவாதிகளாக காட்டிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. அவர்களுக்கு வேடம் போட்டுவிட்ட ஆசிரியர்கள் அவ்விதம் நினைத்திருக்கிறார்கள். இது அறியாமையால் நிகழும் ஒன்றல்ல.

இந்திய இந்து மனங்களின் உள்ளாக முஸ்லீம் விரோத மனப்போக்கு கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளின் மனதிலும் முஸ்லீம் விரோத மனப்பாங்கை உருவாக்கும் நிலை. இந்த இந்து இந்திய ஆதிக்க மனோபாவத்தை நியாயப்படுத்தியும், ஒடுக்கப்படும் தேசிய இனமான இஸ்லாமியர்களை மலினப்படுத்தியும் சித்தரிக்கும் திரைக்காவியம்தான் உன்னைப்போல் ஒருவன்.

இந்திய பார்ப்பன மனநிலையும், பார்ப்பனியத்தை உள்வாங்கிக்கொண்ட மிடிள் கிளாஸ் மனநிலையும் எப்போதும் ‘சமூக அக்கறை’ விஷயத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கும். இவர்களின் பிரச்னை எல்லாம் சாலையில் ஸ்டாப் லைனைத் தாண்டி வண்டியை நிறுத்தக்கூடாது, தெருவில் எச்சில் துப்பக்கூடாது, சிக்னலில் பிச்சை எடுக்கக்கூடாது, பொது இடங்களில் உரக்கப்பேசக்கூடாது௪ இவைகள்தான். அதுவெல்லாம் நடந்தால் அவதாரங்கள் எடுத்து அழித்தொழிப்பார்கள்.

‘தீவிரவாதத்துக்கு தீவிரவாதம் தீர்வில்லை’ என்று குருதிப்புனலில் அகிம்சைப் பேசிய கமல்ஹாசன், இதில் தீவிரவாதத்துக்குத் தீவிரவாதமே தீர்வு என்கிறார். நாட்டில் குண்டு வைத்த நான்கு தீவிரவாதிகளை கடத்தி இவர் குண்டு வைத்து அழிக்கிறார். அந்த நான்கில் மூன்று பேர் முஸ்லீம்கள் ஒரே ஒருவர் மட்டும் இந்து, அவர் அப்பாவி கோயிந்து. அவருக்கு ஒன்றுமே தெரியாது. ‘தெரியாதத்தனமாக’ தீவிரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்தவர். ஆனால் மற்ற மூன்று முஸ்லீம்களும் ‘புனிதப்போர்’ என்றும், ‘கபீர்களை அழிக்க வேண்டும்’ என்றும் எப்போதும் நரம்புப் புடைக்கத் தீவிரவாதம் பேசுபவர்கள். ஆக முஸ்லீம்கள் திட்டமிட்டு குண்டு வைக்கிறார்கள், இந்துக்கள் ஒரு சிலர் ‘தெரியாதத்தனமாக’ அந்த ‘சதிவலை’யில் சிக்கிகொள்கிறார்கள். இதுதான் கமல் சொல்ல வரும் நியதி.

அட ங்கோ௪ குஜராத்தில் 3,000 இஸ்லாமியர்களை தெருத்தெருவாகத் துரத்திக் கொன்றொழித்தீர்களே௪ அது தெரியாதத்தனமாக நடந்ததா? மாலேகானில் குண்டு வைத்தது அப்பாவித்தனத்தின் வெளிப்பாடா?

கமல் கட்டமைக்க விரும்பும் தீவிரவாதம் குறித்த கருத்து அப்பட்டமான பாஸிஸத்தன்மை உடையது. தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் அதிகாரியின் பெயர் ‘ஆரிஃப்’ என்ற உடனேயே மல்லாந்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறார். ‘ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும்’ என்று மோகன்லால் கேரக்டர் சொல்கிறது. ஆனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது கமல் தன் பெயராகச் சொல்வது சீனிவாச ராமானுஜம். தன் காதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கும் போலிப் பெயரைக் கூட ஸ்ரீரங்கத்து மண் வாசனையோடுத் தேர்ந்தெடுக்கும் கமல், ஆரிஃப் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் இற்று விழுகிறது கமலின் முற்போக்கு பூச்சு.

தீவிரவாதத்துக்குத் தீவிரவாதம்தான் தீர்வு என்றால் அவர்களும் அதைத்தானே செய்கிறார்கள? முஸ்லீம் செய்தால் தீவிரவாதம், நீ செய்தால் தேசப்பற்றா? ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’ பற்றி ரொம்ப கவலைப்படும் கமல்ஹாசனை, நாள்தோறும் தமிழகத்திலும், இந்தியாவிலும் நடந்துவரும் ஆயிரக்கணக்கான இந்து மத, ஆதிக்க சாதிய ஒடுக்குமுறைகள் எவ்விதத்தில் பாத்திருக்கின்றன? அதைப்பற்றி எப்போதாவது வெளிப்படையாகப் பேசியதுண்டா? பேசியிருக்கிறார்.

தென் மாவட்ட கலவரங்கள் துளிர்விடுவதற்கு முன்பாக ‘தேவர் மகன்’ என்ற தேவர் சாதிப் பெருமை பேசும் திரைப்படத்தை உருவாக்கினார். அதில் இளையராஜா என்னும் தலித்தைப் பயன்படுத்தி ‘போற்றிப் பாடடி பெண்ணே..’ என்ற தேவர் சாதிக்கான தேசிய கீதத்தை உருவாக்கித் தந்தார். அதே தந்திரக்கார புத்திதான் இப்போது மனுஷயப்புத்திரன் (எ) ஹமீது என்னும் இஸ்லாமியரைப் பயன்படுத்தி உன்னைப்போல் ஒருவனில் பாடல் எழுத வைத்திருக்கிறது. நடுநிலைமையைக் காப்பாற்றவும், ‘பாருங்கப்பா௪ ஒரு முஸ்லீமே வேலைப் பார்த்திருக்கார்?’ என்று சப்பைக் கட்டு கட்டவுமான ஏற்பாடு. இதே வேலையைதான் அப்துல் கலாம் மூலம் பா.ஜ.க. செய்தது. தனது சூலாயுதத்தில் சொட்டிய முஸ்லீம் மக்களின் ரத்தக்கறையை அப்துல் கலாம் என்னும் இஸ்லாமியரைக் கொண்டு பா.ஜ.க. மறைக்க முயன்றதும், உன்னைப்போல் ஒருவன் என்னும் இந்துத்துவ பிரதியின் காவிச் சாயத்தை மனுஷயப்புத்திரனைப் பயன்படுத்தி கமல் சமன் செய்யப் பார்ப்பதும் ஒரே விதமான அரசியல்தான். (ஆனா ஹமீது இதை நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார். பாவம் அவருக்கு கமலை புகழ்ந்து விஜய் டி.வி.யில் கவிபாடவே நேரம் இல்லை)

இப்படி ஆதிக்க சாதி பெருமைகள் பேசும் , இஸ்லாமிய எதிர்ப்பு சமூக மனநிலையை ஊக்குவிக்கும் படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டும் இதே கமல்தான் மிக அண்மையில் ‘என்னால் ஈழப் பிரச்னையை சினிமாவாக எடுக்க முடியாது’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஒரு கலைஞன் எதைப் பேச வேண்டும் என்று புறசக்திகள் தீர்மானிப்பதை ஆதரிக்க முடியாது. ஆனால் அப்படி பேசும், பேச மறுக்கும் செய்திகளுக்கு பின்னுள்ள அரசியலை நாம் பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதையும், லட்சக்கணக்கான மக்கள் முடமாக்கப்பட்டிருப்பதையும் பற்றி தன்னால் சினிமா எடுக்க முடியாது என்று நேர்மையாக ஸ்டேட்மென்ட் கொடுக்கும் கமல்ஹாசன், இதே நேர்மையை இதர விஷயத்திலும் கடைபிடிக்க மறுப்பது ஏன்? பொதுப் பிரச்னைகளில் பூடகமான ஒரு மௌனத்தையேத் தொடர்ந்து பராமரிக்கும் கமல் மிக நுணுக்கமாக தசாவதாரம் முதற்கொண்டு தனது பார்ப்பன மேல்நிலை சாதியாக்கத்தைத் நியாயப்படுத்தி வந்திருக்கிறார்.

கமல் வகையறா முற்போக்கு பார்ப்பனர்கள் பேணும் நடுநிலையின் அரசியல் ஒரே புள்ளியில் சந்திக்கக்கூடியது. அண்மையில் குமுதத்தில் காஞ்சீபுரம் படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து கட்டுரை எழுதியிருந்தார் ஞாநி. ‘காஞ்சீபுரம் ஒரு செயற்கையாக செய்யப்பட்டப் படம். அதில் இயல்புத்தன்மை இல்லை’ என்று அதில் சொல்லியிருக்கிறார். அது சரியானதே. அது ஒரு மிக செயற்கையான படம்தான். ஆனால் கட்டுரையின் அடுத்த பத்தியில், ‘அதே வருடத்தில் வேறு சில விருதுக்குத் தகுதியான நல்ல திரைப்படங்களும் வந்திருக்கின்றன’ என்று ஞாநி பட்டியிலிடும் படங்களின் வரிசையில் ‘எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தின் பெயரும் இருக்கிறது. பெரிய பொருட்செலவுடன் மாதவன் தயாரித்து நடித்த ‘எவனோ ஒருவன்’, மிக மோசமான மய்யப்படுத்தப்பட்டப் பார்ப்பன பிரதி.

தெருவோரத்தில் சுத்தமில்லாமல் தள்ளுவண்டி கடை நடத்துபவரையும், பெட்டிக் கடையில் ஒரு ரூபாய் சேர்த்து விற்கும் சிறு வியாபாரியையும் போட்டுத்தள்ளச் சொல்லும் அந்த பாசிஸ்ட் படத்தைதான் சிறந்த படம் என்று போகிறப் போக்கில் பிட்டு போடுகிறார் ஞாநி.

முஸ்லீம்களுக்கு எதிரான வெகுமக்களின் மனநிலையை கட்டி எழுப்புவதிலும்,பராமரிப்பதிலும் இவர்கள் அனைவருக்கும் சம அளவுக்கு பங்குண்டு. இன்று, ‘நான் ஒரு முஸ்லீம்’ என்று சொல்லிக்கொண்டு சென்னை உள்பட தமிழ்நாட்டின் எந்த நகரத்திலும் அத்தனை சுலபமாக வாடகைக்கு வீடு பிடித்துவிட முடியாது. முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு வாடகைக்குக் கூட வீடு தரப்படுவது இல்லை. சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர், முஸ்லீம் மாணவன் தாடி வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றதால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ‘இதை அனுமதித்தால் பள்ளிக்கூட வளாகம் தாலிபான் மயமாகிவிடும்’,என்று வெளிப்படையாகத் தீர்ப்பே சொல்கிறார். பொதுப்புத்தியில் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்போக்கு மிக வலுவாக அணுதினமும் உருவாக்கப்படுகிறது. இதே வேலையை மேற்கொண்டும் ஒரு படி முன்னேற்றி வைத்ததன்றி இந்த திரைப்படம் சாதித்தது எதுவுமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் வெளியானதிலேயே மிக மோசமான முஸ்லீம் விரோதத் திரைப்படம் இதுதான்.

உண்மையில் கமல் இப்படி மொட்டை மாடிக்குப் போய் கம்ப்யூட்டரை விரித்து வைத்து, கமிஷனருடன் பேரம் பேசி௪ ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் மிக சுலபமாக தெரியக்கூடிய பயங்கரவாதிகள் நிறையப்பேர் நாட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். நரேந்திர மோடி, ராமகோபாலன், துக்ளக் சோ, இந்து ராம், பிரவீன் தொக்காடியா என்று அந்தப் பட்டியல் பெரிது. இவர்கள் அத்தனை பேரும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கை நனைத்தவர்கள்.

ஒரு திரைப்படத்தை வெறுமனே பொழுதுபோக்கு பிரதி என்று அலட்சியமாக அணுக முடியாது. ஏனென்றால் கமல் அவ்வாறு இதை கையாளவில்லை. மாறாக இந்தியாவையே உலுக்கிய பெஸ்ட் பேக்கரி வழக்கை போகிறபோக்கில் ஊறுகாய் மாதிரித் தொட்டுச் செல்கிறார். தன் மனைவியை இந்து தீவிரவாதிகள் கொன்றார்கள் என்பதை முஸ்லீம் ஒருவர் வர்ணிக்கும்போது பின்னாலிருக்கும் சந்தானபாரதி ‘அதான் மிச்சம் ரெண்டு இருக்குல்ல௪’ என்று நக்கல் பேசுகிறார். இவை எவற்றையும் வெறுமனே பொழுதுபோக்காகவும், ‘இதுவும் இன்னொரு படமே’ என்பதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது.

மிக வலுவான பாசிஸ இந்துத்துவ அரசியலை வெளிப்படையாக தூக்கிப் பிடிப்பதன்றி இதன் அரசியல் வேறென்ன? ‘இந்த கொடுமையான படம் முடிந்ததே’ என்று வெளியேறினால் கமல்ஹாசன் மகள் ஸ்ருதியின் இசையில் டைட்டில் கார்டுக்கு பின்னால் ஒலிக்கிறது. ‘சம்பவாமி யுகே, யுகே..’ என்னும் பாடல். ‘யுகங்கள் தோறும் பிறப்பெடுப்போம்’ என்று அர்த்தமாம். ஒண்ணுக்கே௪ இதுல யுகங்கள் தோறுமா?
ஒன்று நிச்சயம் இத்திரைப்படத்துறையன்றி எத் துறையானாலும் அதில் முஸ்லிம்கள் முழுமையாக கால்ப்பதிக்காதவரை இதுபோன்ற பாப்பான்கள் தொடர்ந்து ஆடத்தான் செய்வார்கள்.

வாசகர்: நஸீர்.
-நன்றி சத்தியமார்க்கம்.காம்

களங்கப் படலாமா நீதியின் கரங்கள்?


ஒரு நாட்டின் நீதி, நியாயம், பாதுகாப்பு ஆகியவை நீதித்துறை, காவல்துறை, உளவுத்துறை, இராணுவத்துறை போன்றவற்றால் உறுதிப்படுத்தப்படுகிறது. இதில் முதல் இரண்டு விஷயங்களைத் தவிர்த்து மூன்றாவது விஷயத்தை உள்/வெளி தீய சக்திகளிடமிருந்து நாட்டு மக்களை காவல்துறை, உளவுத்துறை, இராணுவத்துறை போன்றவை பாதுகாக்கின்றன. நாட்டு மக்களிடையே நீதி, நியாயத்தை நீதித்துறை நிர்வகிக்கிறது.

உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயகக் குடியரசான இந்தியாவில், நாடு விடுதலை பெற்ற நாள் முதலே நாட்டுப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும் பாதுகாப்புத் துறைகள் பெரும்பாலும் முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை அனைவரும் அறிவர். இதில் முக்கியமாக உளவுத்துறையின் முக்கிய அதிகாரங்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்பட்டு விடாமல் மிக கவனமாக நாட்டு நிர்வாகம் செயல்பட்டு வந்திருக்கின்றது. இந்திய மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதத்திற்கும் அதிகமாக வாழும் முஸ்லிம் சமுதாயத்திற்கு, நாட்டின் அதி உன்னதத் துறைகளில் ஒன்றான உளவுத்துறையில் ஓர் இடம் கூட இல்லை என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம் இல்லை. இதன் பின்னணியில் திட்டமிட்ட சதி தொடர்கிறது என்பதைச் சாதாரணமாக சிந்திக்கும் எந்த ஒரு பாமரனும் விளங்கிக் கொள்வான்.

அதே போன்றே காவல்துறை மற்றும் இராணுவத்துறைகளில் முஸ்லிம்கள் பெருவாரியாகப் புறக்கணிக்கப்படுவதும் நாட்டில் இச்சமுதாயத்திற்கு எதிராக நடத்தப்படும் திட்டமிட்டத் தாக்குதல்களிலும் துர் பிரச்சாரங்களிலும் இவ்விரு துறைகளும் மிக அதிகமாக பயன்படுத்தப் பட்டு வருவதும் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியக் குடிமக்களாக நாட்டின் எல்லாவித வசதிகளையும் அனுபவிக்க அடிப்படை உரிமை பெற்ற முஸ்லிம் சமுதாயம், தங்களுக்கான பாதுகாப்பு, கொஞ்சம் கொஞ்சமாக அருகி வருவதை நன்றாக அறிந்திருந்தும் இன்னமும் ஒரு சிறு நம்பிக்கையுடன் பொறுமையைக் கைவிட்டு விடாமல் அமைதியாக வாழ்ந்து வருவதன் காரணம், "தங்களுக்கு நீதி, நியாயம் மறுக்கப்படாது; சத்தியம் ஒருநாள் வெல்லும்" என்ற நீதித்துறையின் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலாகும். ஆனால், அதற்கும் சமீபகாலங்களில் சாவுமணியடிக்கப்படுகிறதோ என்ற சந்தேகங்கள் முளை விட ஆரம்பித்துள்ளன. அதற்குத் தகுந்தாற் போன்றே, பாரபட்சமற்று நடுநிலையாக நாட்டில் நீதி, நியாயத்தை நிலைநாட்ட வேண்டிய நீதித்துறையிலும் கறுப்பு ஆடுகள் புகுந்து விட்டதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன.

இதற்கு உதாரணமாக பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டலாம். நாட்டில் நடக்கும் உப்பு சப்பில்லா விஷயங்களிலிருந்து ஹிந்துத்துவத்திற்குக் காவடி தூக்கும் விஷயங்கள் வரை தேவையெனில் நேரடியாக எவ்வித மனுவோ, புகாரோ இன்றியே அவ்விஷயங்களில் தலையிட்டுக் கருத்தும் உத்தரவுகளும் பிறப்பிக்கும் நீதித்துறை, முஸ்லிம்களின் விஷயங்கள் எனும் போது மட்டும் கண்ணைக் கட்டிக் கொள்கின்றன.

திட்டமிட்டே முஸ்லிம்களின் மீதும் முஸ்லிம் இயக்கங்களின் மீதும் செய்யாத விஷயங்களை தலையில் கட்டும்,

தென்காசி குண்டு வெடிப்புகளிலிருந்து மாலேகான் குண்டுவெடிப்பு வரை நாட்டில் நடக்கும் தீவிரவாத, பயங்கரவாத நிகழ்வுகளாகட்டும்
சொராபுதீன் ஷேக் முதல் பட்லா ஹவுஸ் சம்பவங்கள் வரை முஸ்லிம்களைத் தேடிப் பிடித்து, சிட்டுக் குருவிகளைப் போல் சுட்டுக் கொன்று விட்டு, "பயங்கரவாதிகள் என் கவுண்டரில் கொல்லப்பட்டனர்" எனப் பொய்க் கதை பரப்பும் பூச்சுற்றல்களாகட்டும்
குஜராத், மும்பை, பாகல்பூர், சூரத், கோவை நரவேட்டைகள் முதல் பாபரி மஸ்ஜித் இடிப்பு வரை அவற்றுக்காக நியமிக்கப்பட்ட கமிஷன்கள் குற்றவாளிகள் எனக் கைக்காட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கைகட்டிக் கொண்டிருப்பதாகட்டும்,
முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட எந்த ஒரு அநியாயத்திலும் நீதி, நியாயம் வழங்குவதில் நீதித்துறை பாரபட்சத்துடன் அநீதி இழைத்தே வந்துள்ளது.

சமீபத்தில் இந்நிலை மாறி, முஸ்லிம் சமுதாயத்தின் மீதும் இஸ்லாத்தின் மீதும் சங்கபரிவார அமைப்புகளும் காவல்துறையும் பார்ப்பனீய ஆதரவு ஊடகங்களும் இணைந்து நடத்தும் திட்டமிட்ட காழ்ப்புணர்வு வதந்திகளை நீதித்துறைகளும் அப்படியே ஏற்றெடுத்து, நாட்டின் மிக உயர்ந்த, உன்னத பீடத்தில் நீதியைக் காப்பாற்ற வேண்டிய நிலையிலிருக்கிறோம் என்பதை நீதித்துறை மறந்து, சங்கபரிவாரத்தின் பிரச்சார பீரங்கிகளாக மாறி நீதித்துறையையே களங்கப்படுத்தும் விதத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது நேரடியாகவே தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்துள்ளன.

இதன் நேரடி உதாரணம், முஸ்லிம்கள் தாடி வைக்கும் விஷயம் தொடர்பாக மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள முஹம்மது சலீம் என்ற மாணவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த ஒரு வழக்கில், "தாடி வைப்பது தாலிபானிசமாகும்" என நீதிபதி மார்க்கண்டேய கட்சு தலைமையிலான குழு அதிகப்பிரசங்கித்தனமாக, வழக்குக்குத் தொடர்பில்லாத கருத்தைத் தெரிவித்ததாகும்.

"அவரவர் அவரவரின் மதத்தைச் சுதந்திரமாக பின்பற்றி வாழலாம்" என அடிப்படை உரிமை வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, இஸ்லாத்தின் மீது தவறான எண்ணம் தோன்றும் விதத்தில் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி, கருத்தும் தீர்ப்பும் அளித்தார் நீதித்துறைக்கே களங்கமான கட்சு. அந்தத் தீர்ப்பை எதிர்த்து மனம் தளராமல் போராடியதால் முஹம்மது சலீமுக்கு, இன்னமும் கறைபடியாமல் இந்திய அரசியல் சாசனத்தையும் சட்டத்தையும் மதிக்கும் மற்றொரு நீதிபதியால் நியாயம் கிடைத்தது.

இது நாட்டின் அதி உன்னத உயர் பீடமான உச்சநீதி மன்றத்தில் நடந்தது என்றால், தற்போது இச்சம்பவம் நடந்து 6 மாதங்கள் முடியும் முன்னரே உச்சநீதி மன்றத்தின் அடுத்த இடத்தில் இருக்கும் ஓர் உயர்நீதி மன்றத்தில் அதனைப் பின்பற்றி மற்றொரு அநீதத் தாக்குதல், முஸ்லிம் சமுதாயத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ளது.

கேரள உயர் நீதிமன்றத்தின் முஸ்லிம் சமுதாயம் மீதான இத்தாக்குதலுக்குக் காரணமானச் சொல்லப்படும் நிகழ்வு:
"நீதிமன்ற கருத்துகள் நீதி, நியாயத்திற்கு எதிரானவையாகும்"

- எம்.இ.எஸ் தலைவர்

மதமாற்றம் தொடர்பான வழக்கில் இளைஞர்களின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை வேளையின் போது 'லவ் ஜிஹாத்' என்றும் 'ரோமியோ ஜிஹாத்' என்றும் நீதிபதிகள் உபயோகித்த வாசகங்கள் நீதி, நியாயத்திற்கு எதிரானதாகும்" என எம் இ எஸ் தலைவர் டாக்டர் ஃபஸல் கஃபூர் கருத்துக் கூறினார்.

"இது போன்ற விமர்சனங்கள் நீதிபதிகளுக்குத் தகுதியானவை அல்ல. நீதிபதிகளின் உள் மனங்களிலுள்ள விரோதங்களே இது போன்ற விமர்சனங்களின் மூலம் வெளியாகின்றன. இதற்கு முன்னரும் நீதிபதிகளின் பக்கமிருந்து இது போன்ற விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் என கொல்கொத்தா உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் மீதான விசாரணை வேளையில், நீதிபதி மோசமான கருத்துகள் வெளியிட்டது அப்போது விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. பாபரி மஸ்ஜித் விஷயம் விவாதமானதும் நீதிமன்றங்கள் பலவேளைகளில் வெளியிட்ட கருத்துக்களின் காரணத்தால்தான். மதம், ஜாதி, இட ஒதுக்கீடு, மதமாற்றம் முதலான விஷயங்களில் நீதிபதிகள் பலவேளைகளிலும் பக்குவமற்ற கருத்துக்களையே வெளியிடுகின்றனர்.

சமூக விஷயங்களில் நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் கொள்கையை ஏற்றுக் கொண்டு நீதிபதிகள் கருத்துகளை வெளியிட வேண்டும். மதம் மாறிக் கொள்வது மனித உரிமையாகும். இது போன்ற விஷயங்களை அணுகும் போது நீதிபதிகள் இன்னும் சற்று கூடுதல் பக்குவம் காட்ட வேண்டும். ஷாபானு வழக்கிலும் முஸ்லிம் சமுதாயத்தைக் கேவலப்படுத்தும் விதத்திலான விமர்சனங்கள் நீதிமன்றத்திலிருந்து வெளியாகியிருந்தன.

பொது சிவில் சட்டம் நாட்டின் இலட்சியம் எனவும் முஸ்லிம்கள் தான் அதற்குத் தடையாக உள்ளனர் எனவும் பல முறை நீதிபதிகள் கருத்துகள் வெளியிட்டுள்ளனர். இது நீதித்துறையின் மீதான நம்பிக்கையையே தகர்வதற்கு வழிவகுக்கும்" என அவர் மேலும் கருத்துத் தெரிவித்தார்.

கேரள மாநிலம் பத்தனம் திட்டை பகுதியிலுள்ள செயிண்ட் ஜோன்ஸ் கல்லூரியில் பயிலும் இரு எம்.பி.ஏ மாணவிகள் இஸ்லாத்திற்கு மதம் மாறத் தீர்மானித்துள்ளனர். முன்னர் இவர்கள் இருவரும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் ஷாஹின்ஷா என்பவரையும் கேரள அரசுப் பேருந்தில் தற்காலிக நடத்துனராகப் பணிபுரியும் சிராஜுதீன் என்பவரையும் விரும்பித் திருமணம் செய்துள்ளனர். இவர்கள் இஸ்லாத்திற்கு மாறுவதாகத் தகவல் கிடைத்ததும் அப்பெண்களின் பெற்றோர் காவல்நிலையத்தில், "தங்கள் மகள்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாகவும் அவர்களை மானபங்கப்படுத்த முயன்றதாகவும்" கூறி அவ்விருவர் மீதும் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவ்விருவர் மீதும் காவல்துறை வழக்கு பதிவுப் செய்துள்ளது. இதற்கிடையில் வழக்குத் தொடுக்கப்பட்ட இருவரும் உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளனர்.

பெற்றோரின் புகாரை மறுத்து, "தங்களின் சொந்த விருப்பப்படியே இஸ்லாத்திற்கு மாறியதாகவும் தாங்கள் விரும்பியே திருமணம் செய்து கொண்டதாகவும்" அவ்விரு பெண்களும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். சாதாரணமாக மேஜர் ஆனவர்களின் மணமுடிவுக்கு மதிப்பளித்து, அவர்கள் விரும்புபவர்களைத் திருமணம் செய்து இணைத்து வைக்கும் நீதிமன்றம், அப்பெண்களின் வாக்குமூலத்திற்குப் பின்னரும் வழக்கைத் தள்ளுபடி செய்யாமல், அவர்களைப் பெற்றோருடன் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், காவல்துறை அவ்விளைஞர்களுக்கு எதிராக கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகவும் வழக்குப் பதிவு செய்தது.

ஆரம்பத்தில் முதல் தகவலறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வேளையில், "வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களுக்கு எதிராக அப்பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்" எனக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால், இதனை அப்பெண்கள் மறுத்ததோடு, தங்கள் "சொந்த விருப்பத்தின் பேரிலேயே திருமணம் புரிந்ததாகவும் தங்களை எவரும் மதம்மாறக் கட்டாயப்படுத்தவில்லை" என்றும் காவல்துறை தாங்கள் கூறாததை எழுதியுள்ளதாகவும் மறுத்திருந்தனர். இருப்பினும் காவல்துறை அவ்விளைஞர்கள் மீதான வழக்கைத் தொடர்ந்தது.

இவ்வழக்கின் மீதான முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வேளையிலேயே, உச்சநீதி மன்றத்தைத் தொடர்ந்து கேரள உயர்நீதி மன்றமும் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் விதத்திலான ஆட்சேபகரமான கருத்துகளைத் தன் உத்தரவில் கூறியுள்ளது.

கேரள உயர்நீதி மன்றம் தன் உத்தரவில், "முஸ்லிம் இளைஞர்கள் மற்ற சமுதாயப் பெண்களிடம் காதலிப்பது போன்று நடித்துப் பின்னர் இஸ்லாமிய மதத்துக்கு மதமாற்றம் செய்கின்றனர். இதற்காக அவர்களுக்குக் கணிசமான பணம் கிடைக்கின்றது. இயக்கங்களும் சில நபர்களும் இத்திட்டத்தை நடைமுறைபடுத்தச் செயல்படுகின்றனர். இவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் உதவியும் கிடைத்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் பெண்கள் பிரிவு தலைவர் கதீஜா இப்படிப் பட்ட பெண்களை நேரடியாகச் சந்தித்துள்ளார். அது மட்டுமின்றி பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் தொண்டர்களும் இப்பெண்களைச் சந்தித்துள்ளனர்" என்று நீதிமன்றம் உத்தரவின் போது கூறியது.

"மத்திய அரசின் தலையீடும் இவ்விஷயத்தில் தேவை. கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பது தொடர்பான மத்திய அரசின் நிலைபாட்டை விவரித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட வேண்டும்" எனவும் ஆலோசனை கூறிய நீதிமன்றம், "இவ்வாறு செயல்படும் 'லவ் ஜிஹாத்' மற்றும் 'ரோமியோ ஜிஹாத்' ஆகிய இயக்கங்களின் செயல்பாட்டையும் அந்த இயக்கங்களின் நோக்கம், அமைப்பு, பின்பலம், கேரளத்திற்கு வெளியேயும் சர்வதேச அளவிலும் இவ்வியக்கங்களின் தொடர்புகள், பொருளாதார அடிப்படை, வெளிநாட்டுப் பொருளாதார உதவி, கள்ளநோட்டு-கள்ளக்கடத்தல்-போதைப் பொருள்-தீவிரவாத அமைப்புளுடனான தொடர்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள இவ்விஷயங்கள் தொடர்பான வழக்குகளின் கணக்கு, மதமாற்றத்திற்கு இரையான பள்ளி-கல்லூரி மாணவிகளின் எண்ணிக்கை போன்ற விஷயங்களை உட்படுத்தி டி.ஐ.ஜியும் மத்திய உள்துறை அமைச்சகமும் மூன்று வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" எனக் கூறி முன்ஜாமீன் வழக்கை இரு வாரங்களுக்குத் தள்ளி வைப்பதாக உத்தரவிட்டுள்ளது.

1. இரு இளைஞர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் பாதிக்கப்பட்டதாக சேர்க்கப்பட்டுள்ள இரு பெண்களும் வயதுக்கு வந்த மேஜர்களாகும்.

2. அவ்விரு பெண்களும் தாங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் மதம் மாறி, முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் புரிந்ததாக நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் கொடுத்துள்ளதோடு தங்கள் கணவர்களுக்கு எதிராகத் தங்களிடம் எவ்விதப் புகாரும் இல்லை என்றும் மறுத்திருக்கின்றனர்.

"சட்ட நடவடிக்கைக்கு முயற்சி மேற்கொள்ளப்படும்"

முஸ்லிம் லீக் பொதுச் செயலர்!

"ஒரு சமுதாயத்திற்கு எதிரான கருத்துகள் எனத் தோன்றும் விதத்தில் நீதிமன்றத்திலிருந்து வெளியாகியிருக்கும் விமர்சனங்களைத் திரும்பப் பெறுவதற்குச் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அவசர ஆலோசனை நடைபெறும்" எனக் கேரள முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் குஞ்ஞாலி குட்டி அறிவித்துள்ளார்.

"சங்கபரிவாரம் முஸ்லிம் சமுதாயத்தைத் தாக்கும் விதத்திலான பிரச்சாரங்களைச் செய்து வருகிறது. மதமாற்றம் முஸ்லிம் தரப்பில் மட்டும் நடக்கும் காரியமல்ல. முஸ்லிம் சமுதாயத்தில் மட்டுமே மதமாற்றங்கள் நடைபெறுகின்றன என்பது போன்ற தோற்றம் தரும் பிரச்சாரங்கள் நடைபெறுவது துரதிஷ்ட வசமானது" என்று மேலும் அவர் கூறினார்.

இவ்வளவு தெளிவாக வழக்கு தொடுக்கப்பட்ட இளைஞர்களுக்குச் சாதமாக வழக்கில் வாதிகளாகச் சேர்க்கப்பட்டவர்களே கூறிய பின்னரும் அவர்கள் மீதான வழக்கு, பொய் வழக்கு என அப்பட்டமாக தெரிந்த பின்னரும் வழக்கைத் தள்ளுபடி செய்யாததோடு, முன் ஜாமீனும் வழங்காமல் வழக்கை மாற்றி வைத்து சட்டத்தை மீறியுள்ளது கேரள உயர் நீதிமன்றம்.

அத்தோடு நின்றிருந்தால் கூட, முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக எப்போதும் போல் அரசு நிர்வாகங்கள் செயல்படுவது தானே என முஸ்லிம் சமுதாயம் சமாதானமடைந்திருக்கும். ஆனால், அனைவருக்கும் சமமான நீதி, நியாயத்தை வழங்க வேண்டிய பாரபட்சமற்ற நீதித்துறை கூறிய கருத்துகளும் அரசுக்கு நீதித்துறை தானே முன்வந்து வழங்கிய உத்தரவும் மீண்டுமொரு "நான் குதிருக்குள் இல்லை" என்ற வேஷத்தை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பெண், கேரள மாநிலக் காவல்துறை ஐ.ஜி ரேங்கில் உள்ள ஓர் அதிகாரியின் நெருங்கிய உறவினராவார். மற்றொரு பெண், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்பெஷல் ப்ராஞ்ச் அலுவலகத்தில் பணி புரியும் ஓர் அதிகாரி மற்றும் கேரள மாநில பாஜக மாநிலத் தலைவர் ஆகியோரின் குடும்பத்தவராவார். இவர்களின் நெருக்குதலிலேயே இவ்விரு இளைஞர்களுக்கு எதிராக பொய் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதும் நீதிதுறையினுள் புகுந்துள்ள கறுப்பு ஆடும் தலையாட்டி இருப்பதும் இதிலிருந்து வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

முஸ்லிம்களைச் சமூகத்தின் முன்னிலையில் குற்றவாளி கூண்டில் நிறுத்தும் தீராத ஆசையில், சங்கபரிவாரம் உருவாக்கிய ஒரு வாசகத்தை அதே வடிவில் பயன்படுத்திய கேரள உயர்நீதி மன்றத்தில் அமர்ந்திருக்கும் நீதிபதி கெ.டி. சங்கரன், தன் வருகையின் ஆரம்ப இடம் எது என்பதைத் தெளிவாக வெளிச்சமிட்டு காட்டியுள்ளார். "மதமாற்றம் நடத்துவதற்காக பள்ளி-கல்லூரி கேம்பஸ்களை மையமாக்கி லவ் ஜிஹாத் என்ற இயக்கம் செயல்படுவதாக" நீண்டகாலமாக சங்கபரிவார அமைப்புகள் நடத்திய பிரச்சாரத்தில் பயன்படுத்திய அதே வாசகத்தை எவ்விதத் தயக்கமும் இன்றி அப்படியே எடுத்தாண்டு, இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறை டி.ஜி.பிக்கு நீதிபதி சங்கரன் உத்தரவிட்டுள்ளார்.

கொள்கையையும் கோட்பாட்டையும் கட்டிக்காக்கவும் அக்கிரமம், அநியாயங்களுக்கு எதிராக நீதி, நியாயத்தைப் பாதுகாத்து அனைத்து மக்களுக்கும் சமநீதியை நிலைநாட்டவும் நடத்தும் பல்வேறு வழியிலான முயற்சிகளுக்கே இஸ்லாத்தில் "ஜிஹாத்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இறைத்தூதரும் முஸ்லிம் சமுதாயமும் மிகவும் மேன்மையானதாக கருதும் இச்சொல்லைச் சமூகத்தின் முன்னிலையில் மோசமானதாக சித்தரிக்கும் நோக்குடனே சங்கபரிவாரம் இது போன்ற வாசகங்களை உருவாக்குகின்றது.

"நீதிமன்ற கருத்துகள் அவமானகரமானவை"
- முஸ்லிம் ஜமாஅத் கவுன்ஸில் செயலர்!

"சங்கபரிவார சக்திகளின் பொய்ப் பிரச்சாரங்களை அப்படியே நீதிமன்றங்கள் ஒப்பிப்பது அவமானகரமானது" எனக் கேரள முஸ்லிம் ஜமாஅத் கவுன்ஸில் பொதுச் செயலர் வழக்கறிஞர். எ. பூக்குஞ்சு கருத்துத் தெரிவித்துள்ளார். "லவ் ஜிஹாத், ரோமியோ ஜிஹாத் போன்ற வாசகங்கள் ஃபாஸிஸ்ட், வர்க்க அமைப்புகளுடையது மட்டுமேயாகும். கட்டாய மதமாற்றத்தை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிப்பது கிடையாது. அது போன்ற கட்டாய மதமாற்றங்கள் கேரளத்தில் நடைபெறுவதற்குள்ள உறுதியான ஆதாரங்கள் எதுவுமே இல்லை" எனவும் அவர் கூறினார்.

இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பிரச்சாரம் நடத்துவதற்காகவும் தங்களின் ஹிந்துத்துவ அஜண்டாவைச் செயல்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளை மூடி மறைப்பதற்குமே "லவ் ஜிஹாத்" என்ற வாசகத்தை சங்கபரிவாரம் உருவாக்கி, சமூகத்தில் பரவவிட்டது. சில மாதங்களுக்கு முன்னர், சில சங்கபரிவார அமைப்புகள் இதே வாசகத்தைப் பயன்படுத்தித் துண்டு பிரசுரங்களும் சுவர் விளம்பரங்களும் பிரச்சாரங்களும் நடத்தியிருந்தன.

அநாவசிய விவாதங்களை உருவாக்க வேண்டாம் என நினைத்தோ என்னமோ முஸ்லிம்களிடமிருந்து சங்கபரிவாரத்தின் இச்சொல் பிரயோகத்துக்கு எதிராக எவ்வித எதிர்ப்புகளும் அச்சமயங்களில் எழவில்லை. அல்லது சங்கபரிவாரத்தின் எப்போதும் போலான கடைசரக்கு என சமுதாயம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், எல்லா மக்களுக்கும் சமநீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய நீதித்துறை, சங்கபரிவாரம் உருவாக்கிய அதே வாசகத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் சமுதாயத்தினை அவமானப்படுத்த முயன்றது முஸ்லிம்களுக்கு இடையில் மிகக் கடுமையான எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.

இதற்கிடையில் "லவ் ஜிஹாத் அமைப்புக்கும் பாப்புலர் ஃப்ரண்டிற்கும் இடையிலுள்ள தொடர்பைக் குறித்து விசாரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைக் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரிடம் கருத்து கேட்டபோது, அவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக கருத்துக் கூறியுள்ளனர் (விரிவாகப் பெட்டிச் செய்தியில்).

"நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம்"
- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!

"லவ் ஹிஜாத் என்ற இயக்கத்தைக் குறித்தும் அதனுடைய செயல்பாடு, பொருளாதார மூலம் முதலானவற்றைக் குறித்தும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேரள டிஜிபி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்ட நீதிமன்ற நடவடிக்கையை வரவேற்கிறோம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கேரள மாநிலப் பொதுச் செயலாளர் பி. அப்துல் ஹமீது கூறினார்.

"காவல்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைக் குறிப்பிட்டு அவை கூறியதாகப் பொய்க் கதைகளை முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராகப் பரப்பும் சில ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்தின் உண்மை நிலை வெளிவர வேண்டும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதற்கு உதவும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் அதே சமயம், சங்கபரிவார அமைப்புகள் பரப்பிய பொய்ச் செய்திகளைப் பின்பற்றி காவல்துறையும் ஊடகங்களும் பயன்படுத்திய 'லவ் ஜிஹாத்'என்ற சொல்லாட்சியை நாட்டின் உயர்ந்த பீடமான நீதித்துறையும் ஆய்வு செய்யாமல் அதே தொனியில் ஆள்வது நாட்டின் மதசார்பற்றத் தன்மைக்கும் நீதித்துறையின் சார்பற்ற நிலைபாட்டிற்கும் தகுதியான காரியமல்ல" என அவர் கூறினார்.

"பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமையில் செயல்படும் லவ் ஜிஹாத் என்ற அமைப்பைக் குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது என்ற ரீதியில் ஒரு பிரபல பத்திரிகையின் இணைய எடிசனில் வந்த செய்தி உண்மைக்கு மாற்றமானதாகும். இந்தக் கதை, சங்கபரிவாரமும் ஊடகங்களும் இணைந்த ரகசிய கூட்டணி உருவாக்கும் முஸ்லிம் விரோதக் கதைகளில் ஒன்றாகும்.

"மதமாற்றத்தைக் குறித்தும் அதற்காக வரும் வெளிநாட்டு நிதியுதவியைக் குறித்தும் கண்டிப்பாக விசாரணை நடத்தப்பட வேண்டியது தான். அதனை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தோடு மட்டும் நிறுத்தி விடாமல், எல்லா மதங்களிலும் நடக்கும் மதமாற்றத்தைக் குறித்தும் காதல் திருமணங்களின் விவரங்களும் தியான கேந்திரங்கள் மற்றும் ஆசிரமங்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்தி உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டு வர நீதிமன்றங்கள் ஆர்வம் காட்ட வேண்டும்" என அவர் மேலும் கூறினார்.

மடியில் கனமுள்ளவர்களுக்கே வழியில் பயமிருக்கும்! லாவ்லின் ஊழல் வழக்கில் கேரள கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிணராய் விஜயன் சேர்க்கப்பட்டபோது, அதனை எதிர்த்து, கேரளத்தைக் கம்யூனிஸ்ட் கட்சியினர் அல்லோகல்லோலப் படுத்தினர். சிபிஐக்கு எதிராகத் தரக்குறைவான வார்த்தைகளால் அர்ச்சிக்கவும் அவர்கள் தவறவில்லை. அதே போன்றே சில சங்கபரிவார அமைப்புகள் மீதும் காஞ்சி மடாதிபதி காமகோடி மீதும் வழக்குகள் தொடரப்பட்ட வேளைகளில், அவ்விசாரணைகளைத் தடுத்து நிறுத்தவும் அவ்வழக்குகளை விசாரித்த அதிகாரிகளுக்குக் கொலைமிரட்டல்கள் வரை விடுக்கப்பட்டதும் நாடறிந்ததாகும். இவ்வகையான தேசப்பற்றை(!) இவர்கள் வெளிப்படுத்தும் அதே வேளையில், பயங்கரவாதம் தீவிரவாதம் என மக்களைப் பயமுறுத்தும் சொற்களால் மக்களிடையே சங்கபரிவாரத்தாலும் அரசு இயந்திரங்களாலும் ஊடகங்களாலும் அறிமுகப்படுத்தப்படும் இது போன்ற இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் மீது விசாரணை என அறிவிக்கப்பட்டால் முழு ஒத்துழைப்பு நல்கி தங்கள் தேசவிரோத(!) செயல்பாட்டைத் தெளிவித்து வருவது வியப்பளிக்கக் கூடியதாகும்!

ஜிஹாத் என்ற பரிசுத்தமான சொல்லுடன் லவ்(காதல்) என்ற சொல்லைச் சேர்த்து, ஆபாசப்படுத்த சங்கபரிவாரம் முயன்றது என்றால், ஆர்.எஸ்.எஸ்ஸை விட ஒரு படி மேலாக நீதித்துறை "லவ் ஜிஹாத்" என்பதுடன் "ரோமியோ ஜிஹாத்" என்ற புதிய ஒரு நையாண்டி வாசகத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.


இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சங்கபரிவாரம் ஒரு படி குதித்தால் அதனை விட இரண்டு மடங்கு குதிக்க தாங்கள் ரெடி என இந்திய நீதித்துறை செயலால் வெளிப்படுத்தியுள்ளது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளக் கல்லூரி காம்பஸ்களில் முஸ்லிமல்லாத பெண்கள் இஸ்லாம் அல்லாத வேறு மதங்களில் உள்ள இளைஞர்களை விரும்பி திருமணம் புரிவது சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகளாகும். இருப்பினும் இதுநாள் வரை இது ஒரு சமூகப் பிரச்சனையாக நீதிமன்றங்களிலோ அரசியல்வாதிகளிடமோ விவாதப்பொருளாகி இருக்கவில்லை. அதே சமயம், அப்பெண்கள் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை மார்க்கமாக தேர்வு செய்த உடன், மிகப் பெரிய சமூகப்பிரச்சனையாக அது ஊதிப் பெரிதாக்கப் பட்டுள்ளது.

அத்தோடு நீதிமன்றமே பிரபலமான ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயர் எடுத்துக் கூறி, அதனை மோசமானதாக சித்தரிக்க முயன்றிருப்பதும் இயல்பான ஒன்றல்ல.

"லவ் ஜிஹாத்" எனும் இல்லாத ஓர் இயக்கத்தை - சங்கபரிவாரம் உருவாக்கி விட்ட கற்பனைப் பெயரை, தற்போது அகில இந்திய அளவில் அரசியலிலும் இறங்க தீர்மானித்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய சமுதாய அமைப்போடு தொடர்பு படுத்தி, நீதித்துறை இழுத்து விட்டிருப்பது திட்டமிட்ட சங்கபரிவாரத்தின் சதிச்செயல் என்ற சந்தேகத்தை முஸ்லிம் சமுதாய மக்களிடையே அதிக அளவில் கிளப்பியுள்ளது (முஸ்லிம் சமுதாயத் தலைவர்களின் கண்டனங்களைப் பெட்டிச் செய்திகளில் காண்க).

நீதிமன்றத்தின் இந்த அடாவடித்தனமான முஸ்லிம் சமுதாயத்தின் மீது சுமத்தியுள்ள அநீதமான கருத்துருவாக்கப் பின்னணியினைக் குறித்து ஆராய்ந்தால், மேலும் அதிர்ச்சி அதிகமாகின்றது!.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு, கேரளத்திலிருந்து இயங்கிய என்.டி.எஃப், தமிழகத்திலிருந்து இயங்கிய மனித நீதிப் பாசறை, கர்நாடகத்திலிருந்து இயங்கிய கே.எஃப்.டி என்ற கர்நாடகா ஃபெர்ட்டனிட்டி ஃபாரம் ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து தென்னிந்திய அளவில் உருவாக்கிய முஸ்லிம் சமுதாயத்துக்கான சமூகநீதியை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட கூட்டு அமைப்பாகும். பின்னர், அரசியலில் களமிறங்கத் திட்டமிட்ட இந்த அமைப்பு, சில மாதங்களுக்கு முன் கோழிக்கோட்டில் நடத்திய பிரமாண்ட பேரணியிலும் மாநாட்டிலும் மேலும் சில வட இந்திய மாநிலங்களில் இயங்கும் முஸ்லிம் அமைப்புகளும் இணைந்து கொண்டன.

"நீதிமன்றக் கருத்துகள் எதிர்க்கப்பட வேண்டியவை"
- கேரள முஸ்லிம் ஜமாஅத் தலைவர்
"முஸ்லிம் சமுதாயத்தைப் பயங்கரவாத சமுதாயமாகச் சித்தரிக்க சில ஊடகங்களும் அமைப்புகளும் நடத்தும் பொய்ப்பிரச்சாரங்களில் நீதிமன்றமும் கைகோப்பது வருந்தத்தக்கதும் எதிர்க்கப்பட வேண்டியதுமாகும்" எனக் கேரள முஸ்லிம் ஜமாஅத் பெடரேசன் மாநிலத் தலைவர் கடைய்க்கல் அப்துல் அஸீஸ் மௌலவி கருத்துத் தெரிவித்துள்ளார்.

"பெற்றோர்களும் சமுதாயமும் அங்கீகரிக்காதக் கல்லூரி கேம்பஸ் காதல்கள் இங்குப் புதிய விஷயமல்ல. ஆனால், லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக சங்கபரிவாரம் நடத்தும் பிரச்சாரங்கள், கேரள மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்கான தரம்கெட்டத் தந்திரமாகும். இது குறித்த உண்மை நிலவரங்களை அரசே விசாரணை நடத்திக் கண்டறிய வேண்டும். இல்லையெனில், தொடர்ந்து பொய்த் தகவல்களைப் பரப்பி சமூகத்தில் பிளவை உருவாக்குவதற்குச் சங்கபரிவாரத்தின் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்" என்று அவர் கூறினார்.

இவ்வாறு மிகத் தெளிவாக முஸ்லிம் சமுதாயத்திற்கான சமூக நீதியைப் பெறும் நோக்கில் திட்டமிட்டு கட்டமைக்கப்படும் இந்த அமைப்பு, பெண்கள் அமைப்பு, கேம்பஸ்களில் மாணவர் அமைப்பு எனப் பல நிலைகளிலும் தங்களின் செயல்பாட்டைச் சிறிது சிறிதாக விரிவுபடுத்தி வருகிறது.

இந்நிலையிலேயே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் அதன் பெண்கள் பிரிவுத் தலைவியும் இந்த லவ், ரோமியோ விவகாரத்தோடு இணைக்கப் பட்டு, கேரள உயர் நீதிமன்றத்தால் வரம்பு மீறி அநீதமான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரம், முஸ்லிம் சமுதாயத்தின் மீதான சங்கபரிவாரத்தின் திட்டமிட்டத் தாக்குதல்களிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் இந்த அமைப்பை அழித்தொழிக்க, சங்கபரிவாரம் பலகாலமாகப் பல பொய்ச் செய்திகளை இந்த அமைப்பின் மீது பரப்பி வருவது அனைவரும் அறிந்த விஷயமாகும்.

தாங்கள் செய்யும் பல நிழலான செயல்களை முஸ்லிம்கள் மீதும் இஸ்லாமிய அமைப்புகளின் மீதும் சுமத்தி, முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பதில் சங்கபரிவாரம் மிகப் பெரிய வெற்றியை இந்தியாவில் அடைந்துள்ளதை அனைவரும் நினைவில் இருத்த வேண்டும்.

அவற்றில் சில பயங்கரவாதச் செயல்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அவை மழுங்கடிக்கப்பட்டு, அவற்றில் தொடர்புடையவர்களாக பின்னர் கைது செய்யப்பட்ட சங்கபரிவார பிரதிநிதிகள் தண்டனையிலிருந்தும் மக்களின் கவனத்திலிருந்தும் திசை திருப்பப்பட்டு பாதுகாப்பாக நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

"நீதித்துறையின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை உருவாகும்"
- எஸ்.கெ.எஸ்.எஸ்.எஃப் தலைவர்!


"சங்கபரிவாரத்தின் பொய்ச் சொற்களை நீதிமன்றங்கள் அப்படியே வரிக்குவரி உபயோகிப்பது, நீதித்துறையின் மீதான நம்பிக்கை மக்களிடையே தகர்வதற்குக் காரணமாகும்" என எஸ்.கெ.எஸ்.எஸ்.எஃப் தலைவர் நாஸர் ஃபைஸி கருத்து தெரிவித்துள்ளார்.

"நாட்டின் பல்வேறு இடங்களில் ஜனநாயகம் தகர்க்கப்படும் போதெல்லாம், மக்கள் நம்பிக்கை வைப்பது நீதித்துறையின் மீதாகும். ஆனால் அந்த நம்பிக்கையைப் பொய்ப்பிக்கும் வகையில், நீதிமன்றங்கள் சங்கபரிவாரத்தின் ஸ்பீக்கர்களாக மாறுவது பீதியை ஏற்படுத்துவதாகும்" எனக் கூறிய அவர், "ஒரு பக்கத்தில் மதமாற்றத்தை எதிர்த்தும் அதே நேரத்தில் 'தாய்மதத்துக்குத் திருப்பப்படுவதை' ஆதரித்தும் நடித்து மதமாற்றம் செய்வதை சங்கபரிவாரம் செய்து வருகிறது" என்றும் அவர் கூறினார்.

இதற்கு உதாரணமாக, தென்காசியில் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகளே தங்களது சொந்த அலுவலகத்துக்குக் குண்டு வைத்து விட்டு அதனை முஸ்லிம்கள் மீது கட்டிவைக்க முயன்றதும் பின்னர் உண்மை வெளிப்பட்டு போய் கேவலப் பட்டு நின்றதும் நாடறிந்த உண்மை. ஆனால், அந்த வழக்கு ஊடகங்களில் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் செய்ததாக வெளியான போது இடம் பிடித்ததைப் போன்ற முக்கியத்துவம் உண்மையான சங்கபரிவார ஏஜண்டுகள் கைது செய்யப்பட்டபோது முக்கியத்துவம் கொடுக்கப்படாததோடு, அவ்வழக்கே தேய்ந்து, இன்று அவ்வழக்கு நடைபெறுகிறதா? என்பதே தெரியாத நிலையில் உள்ளது.

அதே போன்று மாலேகானில் சிமி அலுவலகம் முன்னிலையில் குண்டு வைத்த, இந்துத்துவ தீவிரவாதி சாமியாரிணி ப்ரக்யா சிங், அந்தக் "குண்டுவெடிப்புக்குக் காரணம் சிமிதான்" என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, ஊடகங்களும் காவல்துறையும் முஸ்லிம்களை வாட்டி எடுத்தன. பின்னர் நடுநிலையாகச் செயல்பட்ட காவலர் கார்கரேயின் உதவியால் உண்மை வெளியான பின்னர், சங்கபரிவாரத்தின் தீவிரவாதத்தைக் குறித்து இன்று வாய் திறப்பார் யாருமின்றி, தீவிரவாதி ப்ரக்யா சிங் உல்லாசமாக இருந்து வருகிறார்.

அதே போன்று குஜராத்தில் நரவேட்டை மன்னன் மோடி தலைமையில் அப்பட்டமாக எரித்தும் வெட்டியும் சுட்டும் 3000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்றொழித்து விட்டு அதற்குக் காரணம் அதற்கு முன்னர் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமே காரணம் என்றும் அதனைச் செய்தவர்கள் முஸ்லிம்கள் தான் என்றும் வகையாகப் பொய் வியாக்கியானம்சங்கபரிவாரத்தால் அவிழ்த்து விடப்பட்டது. இன்று குஜராத்தில் நரவேட்டையாடிய கும்பல் அரசுப் பாதுகாப்புடன் சுகமாகச் சுற்றி வருகிறது.

இவ்வாறு தாங்கள் செய்யும் செயலை முஸ்லிம்கள் தலையில் கட்டி வைப்பதிலும் தாங்கள் செய்யும் படுபாதகச் செயல்கள் வெளியே வராமலிருக்க பொய்த் தகவல்களை முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் அமைப்புகள் மீதும் பரப்பி முஸ்லிம் சமுதாயத்தின் மீதே ஊடகம், காவல்துறை, நீதித்துறை, உளவுத்துறை, மக்கள் என அனைவரின் கவனமும் பார்வையும் இருக்கும் விதத்தில் பார்த்துக் கொள்வதும் அதன் மறைவில் தாங்கள் செய்யும் அராஜக, அட்டூழியங்களை எவருடைய கவனத்தையும் ஈர்க்கா வண்ணம் செய்து முடிப்பதிலும் சங்கபரிவாரம் மிகத் திறமையாக செயல்பட்டு வருவது கண்கூடு.

"நீதிமன்றக் கருத்துகள் வருத்தமளிக்கக்கூடியவை"
- இமாம்ஸ் கவுன்ஸில் சேர்மன்!


"சங்கபரிவாரம் உருவாக்கிப் பிரச்சாரம் செய்த லவ் ஜிஹாத், ரோமியோ ஜிஹாத் ஆகிய வாசகங்கள் நீதிமன்றத்திலிருந்தும் வெளியாவது வருத்தமளிக்கக் கூடியது" என இமாம்ஸ் கவுன்ஸில் கேரள மாநில சேர்மன் கரமனை அஷ்ரஃப் மௌலவி கருத்து கூறினார்.

"சங்கபரிவாரமும் சில ஊடகங்களும் நடத்திய பொய் பிரச்சாரத்தை நீதிமன்றம் தூக்கிப் பிடிப்பது அவமானகரமானதாகும். முஸ்லிம் சமுதாயத்தையும் முஸ்லிம் அமைப்புகளையும் தாக்கும் விதத்தில் நீதிமன்றத்தின் கருத்துக்கள் உள்ளன.

"கல்லூரிகளில் மதம் பார்க்காமல் மாணவ, மாணவியர் தங்களை ஒருவரையொருவர் விரும்புவதும் ஓடிப்போவதும் இங்கு சாதாரணமாக நடக்கும் சம்பவங்களாகும். அதனைப் பூதாகரமாக்கி மாற்று வியாக்கியானங்கள் வழங்குவது வெறுக்கத்தக்கதாகும். எவ்வகையான விசாரணையையும் இமாம்ஸ் கவுன்ஸில் வரவேற்கிறது. ஆனால் அதே சமயம், பொய்ப் பிரச்சாரம் செய்பவர்களுடன் இணைந்து முஸ்லிம் சமுதாயத்தைக் கேவலப்படுத்த முயற்சிப்பது மோசமான விளைவுகளை உருவாக்கும்" என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

சங்கபரிவாரத்தின் முந்தைய பல சதிச் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டால், பத்தனம் திட்டை கல்லூரி நிகழ்விலும் அதே போன்றதொரு திட்டமிட்ட சதியே நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதிப் படுகிறது.

சங்கபரிவாரத்தின் ஒரு சிறப்புப் பிரிவாக, "முஸ்லிம் பெண்களைக் காதல் என்ற பெயரில் மயக்கிச் சீரழித்து, அவர்களை இந்து மதத்துக்கு மாற்றுவதற்கும் அல்லது குறைந்தபட்சம் முஸ்லிம் பெண்களின் வயிற்றில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் இந்துவாகப் பிறக்க வைப்பதற்கும்" நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு ரோமியோ இளைஞர் பட்டாளம் அளவுக்கதிகமாக வாரி இறைக்கப்பட்ட பணபலத்துடன் இயங்கி வருவதாக பல்வேறு முஸ்லிம் அமைப்புகளால் சங்கபரிவாரின் சுற்றறிக்கைச் சான்றோடு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்தத் தகாத நடவடிக்கையை மக்கள் மத்தியிலிருந்து திசை திருப்ப வேண்டுமெனில், அல்லது குறைந்த பட்சம் இந்துக்களிடையே அதன் இத்தகைய கேடுகெட்ட செயலுக்கு நியாயம் கற்பிக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு முஸ்லிம் அமைப்பு பலிகடாவாக்கப்பட வேண்டியது கட்டாயமாகும் என்பது சங்கபரிவாரத்தின் திட்டமாகும்.

எவ்வாறு சங்கபரிவாரத்தின் திட்டமிட்ட தீவிரவாதச் செயல்களுக்கு முஸ்லிம் அமைப்புகள் பலிகடாவக்கப்படுகிறதோ அதே போன்று அதன் இத்தகைய கேடு கெட்ட, கீழ்தரமான செயல்பாட்டிற்கும் ஒரு முஸ்லிம் அமைப்பு பலிகடாவாக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். அதற்காக சங்கபரிவாரத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை அமைப்பே இந்த லவ் ஜிஹாத் அமைப்பாகும். அதனுடன் ஒரு கல்லில் பல மாங்காய் என்பது போல், தங்களுக்குக் கேரளாவில் மட்டுமின்றி இந்திய அளவில் சிம்ம சொப்பனமாக வளர்ந்து வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையும் சிமியைப் போன்று இல்லாமல் அழித்தொழிக்கும் நோக்குடன், பாரபட்சமில்லாமல் செயல்பட வேண்டிய நீதித்துறையில் கறுப்பு ஆடுகளைப் புகுத்தித் தங்கள் திட்டத்தைச் செயல்படுத்துவற்குப் பயன் படுத்திக் கொள்ள முயன்று வெற்றியும் பெற்று விட்டதாகத் தோன்றுகிறது. ஆனால் அது தற்காலிக வெற்றியா? நிரந்தர வெற்றியா? என்பது போகப் போகப் புரியும்.

எது எப்படி இருந்தாலும் முஸ்லிம்களின் ஒரே நம்பிக்கையான நாட்டு மக்கள் அனைவருக்கும் சமநீதியை எவ்விதப் பாரபட்சமும் இல்லாமல் வழங்க வேண்டிய நீதித்துறையும் சிறிது சிறிதாக இவ்வாறு களங்கம் அடைந்து வருவது நல்ல அறிகுறியல்ல.

அரசின் எல்லாத் துறைகளிலும் சங்கபரிவார வெறியர்கள் புகுந்துள்ளனர் என்பது நாடறிந்த உண்மை தான். ஆனால், அது நீதித்துறை முழுவதும் புகுந்து செல்லரித்து அழிக்குமானால், கதி கெட்டு அழிவின் விளிம்புக்குச் செல்லும் சமுதாயத்தின் கோபக்கனல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கூற இயலாது! அதனை உணர்ந்து ஆரம்பத்திலேயே நீதித்துறையைத் தூய்மைபடுத்துவது மத்திய-மாநில அரசுகளின் கடமையாகும்!

-நன்றி சத்தியமார்க்கம்.காம்